தோல் நோய் போக்க மரமஞ்சள்,maramanjal Maruthuva Kurippugal in Tamil

1. மரமஞ்சள் துண்டுகள் சிலவற்றைப் போட்டு நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி இரண்டு அவுன்ஸ் நீரை உள்ளுக்குக் கொடுக்க அடிபட்ட மற்றும் வெட்டுக் காயங்களால் “டெட்டனஸ்” என்னும் கிருமிகள் தாக்கா வண்ணம் தடுப்பு மருந்தாகப் பயன்படும். மருத்துவ குணம்

2. தோல் நோய்கள் வந்தபோது மரமஞ்சளை 5 கிராம் அளவு எடுத்து 100 மி.லி. தண்ணீரிலிட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி அந்தி சந்தி என இருவேளை குடித்து வர ரத்தம் சுத்தமாவதோடு தோல் நோய் நீங்கி மென்மையும் பளபளப்பும் பெறும்.
3. மரமஞ்சளைத் தீநீர் இட்டுக் குடிப்பதால் குரங்கு, நாய், பூனை, ஓணான், பல்லி போன்றவற்றின் கடிவிஷங்கள் முறியும்.
தோல் நோய் போக்க மரமஞ்சள்,maramanjal Maruthuva Kurippugal in Tamil
4. மரமஞ்சள் தூளைத் தேங்காய் எண்ணெயிலிட்டுக் குழைத்து அடிப்பட்ட காயங்கள், புண்கள், தோலின் மேல் தோன்றும் கொப்புளங்கள் ஆகியவற்றின் மேல் பூசி வர விரைவில் குணமாகும்.
5. மரமஞ்சளை குளிக்கும் நீரிலிட்டுக் கொதிக்க வைத்துக் குளிப்பதால் உடல் வலி, தசை வலி ஆகியன தணியும்.
6. சுமார் 5 கிராம் மரமஞ்சள் தூளைத் தேனில் குழைத்து இருவேளை தினம் சாப்பிட அதிக மாதவிடாய் போக்கு (மெனோரேஜியா), வெள்ளைப் போக்கு (லுக்கோரியா) ஆகியன குணமாகும்.
7. ரத்த மூலம் கண்டபோது 5 கிராம் மரமஞ்சள் தூளை நெய்யுடன் குழைத்து சாப்பிட விரைவில் குணமாகும்.
8. மஞ்சள் காமாலை கண்டபோது மரமஞ்சளைத் தேனில் குழைத்து சாப்பிட்டு வர சில நாட்களில் குணமாகும்.
9. சர்க்கரை நோயாளிகள் தாம் வழக்கமாகச் சாப்பிடும் மருந்துகளுக்குத் துணை மருந்தாக மரமஞ்சள் தூளை நீரிலிட்டு கொதிக்க வைத்து அதை வடிகட்டி பருகிவர ஒரு சிறந்த துணை மருந்தாக இருந்து நோயைக் குணப்படுத்தும்.
10. மரமஞ்சளைப் பசும்பாலில் குழைத்து முகத்துக்கு மேற்பூச்சாக பூசி வைத்திருந்து 1 மணிநேரம் கழித்து கழுவிவிட முகப் பருக்கள், கரும் புள்ளிகள், மென்மையான முடிகள் நாளடைவில் மறைந்துவிடும்.
மரமஞ்சள் மெழுகு :
மரமஞ்சள் 1 பங்குடன் 16 பங்கு நீர் சேர்த்து கால் பங்காகக் காய்ச்ச வேண்டும். பின்னர் அதை வடிக்கட்டி மேலும் அடுப்பிலிட்டுக் காய்ச்சி மெழுகு பதமாக்கி வெயிலிலிட்டு உலர்த்தி வைத்துக் கொள்ள வேண்டும்.
11. மரமஞ்சள் மெழுகை நெய்யில் குழைத்து சிறிது படிகாரம் சேர்த்து கண்களுக்கு மை போல் தீட்டிவர கண் சிவப்பு, கண்ணில் அழுக்குப் படிதல் போன்ற கண் நோய்கள் குணமாகும்.
12. மரமஞ்சள் மெழுகைப் பொடித்து வெருகடி அளவு எடுத்து தேனில் குழைத்து குழந்தைகளுக்கு உள்ளுக்குக் கொடுக்க வயிற்றுக் கோளாறுகள் குணமாகும்.
13. ஒருபங்கு மரமஞ்சள் மெழுகுடன் 30 பங்கு நீர் சேர்த்து கரைத்து ஆசன வாயைக்கழுவி வர முளை மூலம் சுருங்கி குணமாகும். இத்துடன் வெருகடி மரமஞ்சள் மெழுகுத் தூளை வெண்ணெயில் குழைத்து தினம் இருவேளை உள்ளுக்கு சாப்பிட்டு வர வேண்டும்.
14. சிறுநீர்ப் பாதையில் வலி கண்ட போது மரமஞ்சள் மெழுகை 5 கிராம் அளவு எடுத்து அதனுடன் 1 ஸ்பூன் நெல்லி வற்றல் பொடியையும் சேர்த்து ஒரு டம்ளர் நீரிலிட்டுக் கொதிக்க வைத்து குடித்து வர சிறுநீர்ப் பாதை அடைப்பு வீக்கம், வலி ஆகியன குணமாகும்.
Loading...
Categories: Maruthuva Kurippugal in Tamil

Leave a Reply


Sponsors