நரம்புத் தளர்ச்சிக்கு சித்த மருத்துவம்,narambu thalarchi siddha maruthuvam

இன்றைய இளைய தலைமுறையினரை அதிகமாக பாதித்திருக்கும் பிணி இது. எழுதினால் கை நடுங்கும். எதை எடுத்தாலும் ஒரு தடுமாற்றம், அடிக்கடி களைப்பு, சோர்வு, தூக்கமின்மை இவைகள் முக்கிய அறிகுறிகளாகும். நரம்புத் தளர்ச்சி ஏற்பட்ட பெண்கள் மிகவும் பாதிக்கப் படுகின்றார்கள். அடிக்கடி அழுவதும், சிரிப்பதும், பயித்தியம் போல் நடப்பதும் உண்டு. எளிதில் சீரணமாகக் கூடிய உணவு வகைகள் காலை மாலை உணவுடன் இனிப்பு வகைகளை சேர்த்துக் கொள்ளுதல் நல்ல உடைகள், வாசனைப் பொருட்கள் கொள்ளுதல் பூந்தோட்டங்களில் கடற்கரையில் உலாவுவது என அவர்கள் மனோ நிலை எப்போதும் சந்தோஷ சூழலில் வைத்திருப்பது அவசியம். அன்பும், அரவணைப்பும் அவர்களுக்கு ஆறுதல் தரும்.

 

நரம்புத் தளர்ச்சிக்கு சித்த மருத்துவம்,narambu thalarchi siddha maruthuvam

 

சித்த மருந்து.. அமுக்கிராக் கிழங்கு – ஐந்நூறு கிராம். மிளகு – இருபத்தி ஐந்து கிராம். சுக்கு – இருபத்தி ஐந்து கிராம். அதிமதுரம் – இருபத்தி ஐந்து கிராம். ஏல அரிசி – இருபத்தி ஐந்து கிராம். சாதிக்காய் – இருபத்தி ஐந்து கிராம். தேன் – ஒரு கிலோ. பால் – அரை லிட்டர். அமுக்கிராக் கிழங்கை நன்றாக இடித்துக் கொள்ளவும்.ஒரு மண் சட்டியில் பாலை ஊற்றவும்.நல்ல ஒரு வெள்ளைத் துணியால் பானையின் வாயை கட்டி இடித்து வைத்துள்ள அமுக்கிராக் கிழங்குப் பொடியை துணியின் மேல் பரப்பி பானையின் மூடியால் பொடியை மூடி சுமார் முப்பது நிமிடங்கள் சிறு நெருப்பில் அவித்து எடுத்துக் கொள்ளவும். இரண்டு மணி நேரம் நிழலில் உலர்த்தி மீண்டும் இடித்து சலித்துக் கொள்ளவும். மற்ற மருந்துகளை தனித்தனியாக் இடித்து சலித்து மேற்கண்ட அளவில் எடுக்கவும். எல்லா பொடிகளையும் நன்கு கலக்கிக் கொள்ளவும். ஒரு கிலோ தேனை ஒரு சட்டியில் ஊற்றி [ சிறிய தணலில் ] மேற்கண்ட எல்லாப் பொடிகளையும் சிறிதுசிறிதாகக் கொட்டி நன்கு கிளறி கிண்டி வைக்கவும் உண்ணும் முறை ; – காலை உணவு உண்டு ஒரு தேக்கரண்டி அளவும் இரவு உணவிற்குப் பின்னர் ஒரு தேக்கரண்டி அளவும் உட்கொண்டு பால் அருந்தவும். நாற்பத்தெட்டு நாட்கள் உண்ண வேண்டும். பத்தியம் ; – குளிர்ந்த பானங்கள், மீன், கருவாடு போன்ற அசைவ உணவுகளை அறவேத் தவிர்க்கவும்.

Loading...
Categories: Maruthuva Kurippugal in Tamil

Leave a Reply


Sponsors