ஆந்திரா புளியோதரை,puliyodharai recipe in tamil Font

Loading...

தேவையானவை:

உதிராக வடித்த சாதம் – 2 கப்,
புளி சிறிய – எலுமிச்சை அளவு,
பச்சை மிளகாய் – 2,
கறிவேப்பிலை – சிறிது,
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
வெல்லத் துருவல் – 2 டீஸ்பூன்,
நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்,
கடுகு – ஒன்றரை டீஸ்பூன்,
உளுந்து, கடலைப் பருப்பு – தலா 2 டீஸ்பூன்,
மிளகாய் வற்றல் – 4,
பெருங்காயம் – அரை டீஸ்பூன்.

 

Puliyotharai in tamil,ஆந்திரா புளியோதரை

செய்முறை:

* சாதம் சூடாக இருக்கும்போதே அதை குவித்தாற்போல வைத்து நடுவில் குழிவாக்குங்கள்.
* அதில் பச்சை மிளகாய் (இரண்டாகக் கீறி), கறிவேப்பிலை, மஞ்சள் தூள், 1 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஆகியவற்றைப் போட்டு மூடி வையுங்கள். புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வையுங்கள்.
* மீதமுள்ள எண்ணெயில் 1 டீஸ்பூன் கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயம் ஆகியவற்றை சிவக்க வறுத்து, புளி கரைசலை ஊற்றி, உப்பு சேர்த்து பச்சை வாடை போக கொதிக்க வையுங்கள்.
* பிறகு வெல்லம் சேர்த்து மேலும் ஒரு நிமிடம் கொதிக்க வைத்து இறக்குங்கள்.
* மீதமுள்ள கடுகை அரைத்து வையுங்கள்.
* சாதத்தில் புளி கலவை, அரைத்து வைத்துள்ள கடுகு விழுது ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறுங்கள்.

Loading...
Loading...
Categories: Rice Recipes In Tamil, Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Recent Recipes

Sponsors