வயிற்றுப் புண் உள்ளவர்களா,vayiru pun marunthu in tamil

வயிற்றுப்புண் இருவகையில் ஏற்படுகிறது. அவை

உணவு முறை
மனஅழுத்தம்
உணவு முறையில் மாறுபாடு கொண்டவர்களில் முதலில் பாதிக்கப்படும் உறுப்பு வயிறுதான். நேரம் கடந்த உணவு, அதிக பட்டினி, எளிதில் ஜீரணமாக உணவு, அதிக உணவு போன்ற காரணங்களால் வயிற்றில் புண் உண்டாகிறது.
அதுபோல் மன அழுத்தம், மன எரிச்சல், அதிக கோபம், பயம், வெறுப்பு இவைகளாலும் வயிற்றில் புண் உண்டாகிறது.

மலச்சிக்கல், அஜீரணக் கோளாறுகள் வயிற்றில் உள்ள அபான வாயுவை சீற்றமடையச் செய்து வயிற்றுப் புண்ணை உண்டாக்குகிறது.

வயிற்றுப் புண் உள்ளவர்களா,vayiru pun marunthu in tamil
அதுபோல மனம் சம்பந்தப்பட்ட காரணங்களால் இயல்புக்கு மாறாக சுரப்பிகள் அதிகம் நீரைச் சுரந்து வயிற்றுப் பாதிப்பை உருவாக்குகிறது.
உணவை நன்கு மென்று சாப்பிட வேண்டும்.
அதிக அளவு நீரைப் பருக வேண்டும்
அதிக சூடான பானங்களை, குடிக்கக்கூடாது. அதுபோல வேகமாகவும் அருந்தக்கூடாது சூடான உணவுப் பொருட்களை சாப்பிடக் கூடாது.
அதிக குளிரூட்டப்பட்ட உணவுகளையும் தவிர்ப்பது நல்லது.
புளி, காரம் இவற்றை கண்டிப்பாக குறைத்துக்கொள்ள வேண்டும்.
மது,போதை, புகை போன்றவை இரைப்பையை பாதித்து, குடல்களில் புண்களையும் உண்டாக்கும்.
எளிதில் ஜீரணமாகாத உணவுகளை தவிர்த்து எளிதில் ஜீரணமாகும் உணவுகளை உண்ண வேண்டும்.
பசித்த பின் உணவு அருந்த வேண்டும்.அதிகமாக உணவு அருந்தக்கூடாது
அதிகம் புளித்துப்போன உணவுகளைச் சாப்பிட வேண்டாம். இரவில் புளித்த தயிர்ஈ மோர் கெடுதலை ஏற்படுத்தும்.
கோபம், டென்சன், எரிச்சல், அதிக பயம் இவற்றை குறைத்துக்கொள்ள வேண்டும்.

தினமும் குறைந்தது எட்டு டம்பளர் தண்ணீராவது குடிக்க வேண்டும்
மேற்கண்ட நடைமுறைகளை சரியாக கடைப்பிடித்து வந்தால் வயிற்றுப்புண் ஏற்படாமல் ஆரோக்கியமாக வாழலாம்.

Loading...
Categories: Maruthuva Kurippugal in Tamil

Leave a Reply


Sponsors