வெங்காயத்தாளின் மருத்துவ குணங்கள்,vengaya thal maruthuva kurippu in tamil

சத்துள்ள கீரைகள் என்ற பட்டியலில் வெங்காயத்தாளையும் சேர்த்து கொள்ளுங்கள். வெங்காயத் தாளில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. வெங்காயம் போலவே வெங்காயத்தாளிலும் கூட கந்தகச்சத்து அதிகமாக உள்ளது. இந்த இளந்தளிர் வெங்காயத்தாளில் குறைந்த கலோரி இருக்கின்றன.

மேலும் இதில் விட்டமின் C, விட்டமின் B2 மற்றும் தயமின் உட்பட பல விட்டமின்கள் நிறைந்துள்ளன. அவைகளில் விட்டமின் A மற்றும் விட்டமின் K கூட நிறைந்துள்ளன. இது தவிர, இவைகளில் காப்பர், பொஸ்பரஸ், மக்னீசியம், பொட்டாசியம், குரோமியம், மங்கனீஸ் மற்றும் நார்ச்சத்துக்கள் மூலங்களாக உள்ளன.

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும், புற்றுநோயை குணப்படுத்தும். வெங்காயத்தாளில் உள்ள விட்டமின் C நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலை நோயிலிருந்து பாதுகாக்கிறது. வெங்காயத்தாளில் உள்ள பெக்டின் என்னும் நீரில் கரையக்கூடிய கூழ்ம நிலை கார்போஹைட்ரேட், குறிப்பாக பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.

வெங்காயத்தாளின் மருத்துவ குணங்கள்,vengaya thal maruth

வெங்காயத்தாள் கண் நோய் மற்றும் மற்ற கண் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை வழங்குகிறது. வெங்காயத்தாள் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. அவைகள் உடலில் உள்ள கொழுப்புக்களை குறைக்கவும் மற்றும் அதனால் உண்டாகும் இதய நோய் அபாயத்தையும் குறைக்கின்றது. இந்த காய்கறிகளில் உள்ள சல்பர் சேர்மங்கள், இரத்த அழுத்த அளவுகளை குறைக்கவும் மற்றும் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

வெங்காயத்தாள் இரத்தத்தில் உள்ள கொழுப்பு அளவுகளை குறைக்க உதவுகிறது. வெங்காயத்தாளில் உள்ள குரோமியம் சத்து நீரிழிவு நோய்க்கான சுகாதார நலன்களை வழங்குகிறது. இது இரத்தத்தில் காணப்படும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது மற்றும் குளுக்கோஸ் ஏற்புத் தன்மையை அதிகரிக்கிறது. மேலும் இதில் உள்ள புரோப்பைல் டைசல்பேட்டானது, இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

Loading...
Categories: Maruthuva Kurippugal in Tamil

Leave a Reply


Sponsors