Loading...

தேவையான பொருட்கள்:

  • வறுத்த வேர்க்கடலை – ஒரு கப்
  • முந்திரி பருப்பு – அரை கப்
  • பிரட் துண்டுகள் – 2 கப்
  • பால் – ஒரு கப்
  • வெங்காயம் – ஒன்று
  • பச்சை மிளகாய் – 4
  • இஞ்சி – ஒரு சிறிய துண்டு
  • கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு
  • உப்பு – தேவையான அளவு
  • பொரிப்பதற்கு எண்ணை – 400 கிராம்

செய்முறை:

* வேர்க்கடலை, முந்திரி பருப்பு, வெங்காயம், மிளகாய், இஞ்சி, எல்லாவற்றையும் மிக்சியில் கரகரப்பாக அரைத்து எடுக்கவும்.

* பிரட் துண்டுகளை உதிர்த்து, கறிவேப்பிலை, கொத்துமல்லி சேர்த்து, பால் விட்டு கெட்டியாகப் பிசையவும்.

 

வேர்க்கடலை போண்டா,verkadalai bonda samayal kurippu,bonda recepies in tamil

* தேவையான உப்பைக் கடைசியாகச் சேர்த்து நன்கு கலக்கவும்.

* கடாயில் எண்ணை ஊற்றி நன்கு காய்ந்ததும், செய்துவைத்திருக்கும் கலவையை போண்டாக்களாக கிள்ளி எண்ணையில் போடவும்.

* நன்கு சிவந்து மொறு, மொறுப்பானதும் வடிகட்டியில் போடவும்.

* ஒருதட்டில் வைத்து சூடாகப் பரிமாறவும்.

குறிப்பு: கடலை மாவு சேர்க்காதலால் குழந்தைகள், பெரியவர்கள் என எல்லாருக்குமே கொடுக்கலாம்.

Loading...

Leave a Reply


Recent Recipes

Sponsors