தர்பூசணியின் மருத்துவ குணங்களும்,watermelon benefits in tamil

வெயில் காலம் வந்துவிட்டாலே வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க என்ன என்ன செய்யலாம் என்றே பலரும் யோசிப்பர். மேலும் சிலர் இளநீர், நுங்கு, குளிர்பானங்கள் போன்றவற்றை குடிப்பார்கள். இவற்றை எல்லாம் குடித்தால் தேவாமிர்தம் போல் தான் இருக்கும். ஆனால், மறுபடியும் நாக்கு வறண்டு மீண்டும் உஷ்ணத்தைக் கிளப்பும்.
இதிலிருந்து தப்பிக்க வேண்டுமென நினைத்தால் தர்பூசணியை ட்ரை பண்ணுங்க…

வருடத்தில் ஒவ்வொரு சீசனிலும் ஒவ்வொரு பழம் கிடைக்கும். ஆனால், தர்பூசணிக்கு சீசனே இல்லை. அது வருடம் முழுவதும் விளையக்கூடியது.

தர்பூசணி தாகத்தை தணிப்பதில் சிறந்தது. ஏனெனில், தர்பூசணியில் 92% நீர்ச்சத்தும், 3.37% நார்ச்சத்தும் இருக்கிறது.

 

watermelon benefits in tamil,watermelon Maruthuva Kurippugal in Tamil,watermelon maruthuva palangal,watermelon

மதிய உணவுகளில் பலர் பழங்களையே சேர்க்கின்றன. எனில் தர்பூசணிக்கு அதில் முதலிடத்தைக் கொடுங்கள். ஏனெனில், தர்பூசணிக்கு பசியினைப் போக்கும் தன்மை அதிகம் உண்டாம். என்னங்க இனி
உங்க மதிய உணவுவில் தர்பூசணி கண்டிப்பாக இருக்கும் அல்லவா…..

தர்பூசணி வயிற்று உப்புசத்தைக் குறைக்கும், பித்தச் சூட்டை விரட்டும், வயிறு எரிச்சலைக் குறைக்கும், அடிவயிற்றுக் கோளாறுகளை சரிசெய்யும்.

சிறுநீரகக் கோளாறுகள் உள்ளவர்கள் தர்பூசணி சாப்பிடுவதன் மூலம் சிறுநீரகக் கோளாறை சரி செய்யலாம். மேலும், தர்பூசணி சிறுநீர்ப்பையில் கற்கள் சேருவதைத் தடுக்கிறது.

தர்பூசணியில் சிட்ரூலின் என்ற சத்து பொருள் உள்ளது. இது ரத்த நாளங்களை விரிவைடைய செய்து, ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது. மேலும், இதில் இரும்புச்சத்து, தாது உப்புகள், சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் சி, வைட்டமின் பி மற்றும் நியாசின் என்ற பொருளும் உள்ளது.

இத்தனை குணங்களைக் கொண்டுள்ள தர்பூசணி ஒன்று இருந்தால் 6 லட்சம் தர்பூசணி பழங்களை உற்பத்தி செய்து விடலாமாம். ஆச்சரியமாகத் தான் இருக்கிறது.

Loading...
Categories: Maruthuva Kurippugal in Tamil

Leave a Reply


Sponsors