காரமல் பனானா வித் ஐஸ்க்ரீம்,caramel bananas with ice cream in tamil

Loading...

தேவையனவை:
வாழைப்பழம் – ஒன்று
சர்க்கரை – 3 தேக்கரண்டி
வெண்ணெய் – 2 தேக்கரண்டி
ஐஸ்க்ரீம் – விருப்பமான வகை
ஜெல்லி – 6 துண்டுகள்


செய்முறை:

வாழைப்பழத்தை சிறுத் துண்டுகளாக நறுக்கி வைக்கவும். மற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.

தவாவை வைத்து வெண்ணெயை போட்டு உருக்கிக் கொள்ளவும்.

 

காரமல் பனானா வித் ஐஸ்க்ரீம்,caramel bananas with ice cream in tamil

வெண்ணெய் உருகியதும் வாழைப்பழத்தை போட்டு பொன்னிறமாக வறுத்து தட்டில் எடுத்து வைக்கவும்.

பின்னர் வெண்ணெயில் சர்க்கரையை சேர்த்து கரைய வைத்து கேரமல் தயாரித்து எடுத்துக் கொள்ளவும்.

அந்த கேரமல் கலவையை வாழைப்பழத்தின் மேல் ஊற்றவும்.

அதன் பிறகு பரிமாறும் கோப்பையில் 2 காரமல் கலந்த வாழைப்பழத் துண்டுகள், அதன் மேல் 2 ஜெல்லி, அதில் ஐஸ்க்ரீம் வைக்கவும். மீண்டும் அதே போல் காரமல் கலந்த வாழைப்பழம், ஜெல்லி, வைத்து பரிமாறவும்.குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் விரும்பி உண்பார்கள். எல்லா வகை பழங்களிலும் செய்யலாம்

Loading...
Loading...
Categories: Ice Cream Recipe in Tamil

Leave a Reply


Recent Recipes

Sponsors