சாக்லேட் பிஸ்கட் மில்க் ஷேக்,chocolate biscuit milkshake In tamil font

சாக்லேட் பிஸ்கட் மில்க் ஷேக் செய்து குடிக்கலாம வாங்க

மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு எப்போதும் டீ, காபி, பால் கொடுப்பதற்கு பதிலாக, இன்று சற்று வித்தியாசமாக பிஸ்கட் கொண்டு மில்க் ஷேக் செய்து கொடுங்கள்.

குழந்தைகளுக்கு விருப்பமான சாக்லேட் பிஸ்கட் மில்க் ஷேக்
தேவையான பொருட்கள் :

குளிர்ச்சியான பால் – 2 கப்
சாக்லேட் க்ரீம் பிஸ்கட் – 3
க்ரீம் இல்லாத சாக்லேட் பிஸ்கட் – 2
சாக்லேட் சாஸ் – 2 டீஸ்பூன்

 

சாக்லேட் பிஸ்கட் மில்க் ஷேக்,chocolate biscuit milkshake In tamil font

செய்முறை :

* மிக்ஸியில் பாலை ஊற்றி, அத்துடன் க்ரீம் இல்லாத சாக்லேட் பிஸ்கட்டை துண்டுகளாக உடைத்து போட்டு நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதில் க்ரீம் உள்ள சாக்லேட் பிஸ்கட்டை உடைத்து சேர்த்து நன்கு மென்மையாக அடித்துக் கொள்ளவும்.

* பின்பு அதனை ஒரு டம்ளரில் ஊற்றி, அத்துடல் சாக்லேட் சாஸ் சேர்த்து நன்கு கிளறி பரிமாறினால், சாக்லேட் பிஸ்கட் மில்க் ஷேக் ரெடி!!!

Categories: Ice Cream Recipe in Tamil

Leave a Reply


Sponsors