தர்பூசணி ஐஸ்க்ரீம், ice cream recipes in tamil

பொடியாக நறுக்கிய தர்பூசணி – 3 கப்,
கெட்டியான பால் – 2 கப்,
சர்க்கரை – அரை (அ) முக்கால் கப்,
ஃப்ரெஷ் க்ரீம் – 150 கிராம் (கடைகளில் கிடைக்கும்),
ரோஸ் எசென்ஸ் – கால் டீஸ்பூன்.

தர்பூசணி ஐஸ்க்ரீம், ice cream recipes in tamil

நன்கு சுண்டக் காய்ச்சிய பாலில் சர்க்கரை சேர்த்து கரைக்கவும். இத்துடன் பொடித்த தர்பூசணியை சேர்த்து மிக்ஸியில்ஒருஅடி அடிக்கவும். இத்துடன்  ப்ரெஷ் க்ரீம் மற்றும் எசென்ஸ் சேர்க்கவும். இந்தக் கலவையை ஒரு அழுத்தமான அலுமினிய பாக்ஸில் நிரப்பி ஃப்ரீஸரில் வைக்கவும். அரை மணி  நேரம் கழித்து எடுத்து மிக்ஸியில் ஒரு அடி அடித்து செட் செய்து எடுத்து மீண்டும் அடித்து செய்யவும். இது நல்ல ஐஸ் க்ரீமாக செட் ஆனதும் எடுத்து  பொடித்த தர்பூசணியைக் கொண்டு அலங்கரித்து பரிமாறவும்.

குறிப்பு: இதேபோல் மாம்பழம், ஆரஞ்சு பழச்சாறு கொண்டும் செய்யலாம்.

Categories: Ice Cream Recipe in Tamil

Leave a Reply


Sponsors