கூந்தல் பொலிவு பெற வழிகள்,koonthal polivu pera Tipsin tamil

கூந்தல் அதன் தன்மையை பொறுத்து வறண்ட கூந்தல், எண்ணெய் பசையுடைய கூந்தல் என்று பிரிக்கப்படுகிறது. ஒருவரின் கூந்தல் எத்தன்மையுடையது என்பதை அறிந்து அதற்கேற்ப சில வழி முறைகளை கடைபிடித்தால் பட்டு போன்ற பளபளப்பான கூந்தலை பெறலாம். வறண்ட தன்மையுள்ள கூந்தலுக்கான சில டிப்ஸ்கள்.

தலையில் எண்ணெய்ச் சுரப்பிகளின் செயல்பாடு குறைவு காரணமாகவே கூந்தல் வறட்சியடைகிறது. மேலும், அதிகமாக சூரியகதிர்வீச்சிற்கு உட்படுதல், கடின தன்மையுள்ள ஷாம்புகளை அதிகமாக பயன்படுத்துதல் மற்றும் சில ரசாயன சிகிச்சை போன்றவற்றாலும் கூந்தலில் வறட்சி தன்மை உண்டாகிறது.

* வறண்ட கூந்தலுடையவர்கள் ஆலிவ் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெயை மிதமாக சூடுபடுத்தி தலையில் தடவி சிறிது நேரம் ஊறவிட்டு தலைக்கு குளிக்க வேண்டும். மேலும் மைல்டான தன்மையுடைய ஷாம்புக்களை பயன்படுத்தினால் கூந்தலின் வறட்சி தன்மை குறையும்.

கூந்தல் பொலிவு பெற வழிகள்,koonthal polivu pera Tipsin tamil

* விளக்கெண்ணெய், கிளிசரின், வினிகர் ஆகியவற்றை சமஅளவு எடுத்து மிதமான ஷாம்புவுடன் சேர்த்து கலந்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து குளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால், கூந்தலின் ஆரோக்கியம் பராமரிக்கப்படும்.

* சிலருக்கு ஷாம்பு போட்டு குளிப்பதாலும் கூந்தல் அதிகப்படியாக வறண்டு காணப்படும். அப்படிபட்டவர்கள் தலைக்கு குளித்த பின் சிறிது பாலை தலையில் தேய்த்து நன்கு அலசி விட வேண்டும். இவ்வாறு செய்தால் கூந்தல் பட்டுப் போல மின்னும்.

* வறட்சியான கூந்தலை உடையவர்கள் ஹேர் -டிரையர் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது

Categories: Azhagu Kurippugal, Beauty Tips Tamil

Leave a Reply


Sponsors