உடல் எடையை அதிகரிக்கும் சூப்பர் உணவுகள், Udal Edai Athikarikka sapida vendiya unavugal

உடல் எடையை குறைப்பதற்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு மத்தியில், உடல் எடையை அதிகரிக்க வேண்டுமே என்று புலம்புவர்களும் அதிகம்.
நம் தினசரி உணவு பழக்க வழக்கங்களின் மூலம் மிக எளிதாக உடல் எடையை அதிகரிக்கலாம்.
கேரட், பீட்ரூட்
கேரட்டில் வைட்டமின் ஏ மற்றும் சி நிறைந்து காணப்படுகின்றது, மாதுளையிலும் உடலுக்கு தேவையான சத்துக்கள் அதிகம் உள்ளன.
பாலுடன் கேரட் அல்லது பீட்ரூட் ஜூஸ் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு நலன் தருவதுடன், எடையும் அதிகரிக்கும்.
நட்ஸ்
வால்நட்ஸ், பாதாம் மற்றும் ஹாசில் நட்ஸ் உள்ளிட்ட பருப்புகளில் சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் மற்றும் கலோரிகள் அதிகம் உள்ளது.
இவற்றில் அடங்கியுள்ள அதிக அளவு புரதம் உடலுக்கு உரத்தை அளிக்கிறது.
தினமும் சிறிதளவேனும் உலர் பழங்களை எடுத்துக் கொள்வது உடல் எடையை அதிகரிக்க நிச்சயம் உதவும்.
உடல் எடையை அதிகரிக்கும் சூப்பர் உணவுகள், Udal Edai Athikarikka sapida vendiya unavugal

வாழைப்பழம்
வாழைப்பழத்தில் அதிகளவில் கலோரிகள் உள்ளது, எனவே உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்களுக்கு சிறந்த பழமாக இருக்கும்.
அத்திப்பழம்
ஒரு அத்திப்பழத்தில் 111 கலோரிகள் உள்ளது, தினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்.
அவகேடா
எடையை அதிகரிக்க விரும்புவர்கள் அதிகளவில் அவகேடா பழத்தை சாப்பிட வேண்டும்.
இவற்றின் பெரிய பழத்தில் 322 கலோரிகள் உள்ளது, மேலும் இதில் நல்ல கொழுப்புகள் அதிகம் இருப்பதால் இதயத்திற்கு ஆரோக்கியம் தரும்.
பேரிச்சம் பழம்
தினமும் பேரிச்சம் பழங்கள் சாப்பிடுவது நிச்சயம் உடல் எடையை அதிகரிக்கும், அதுவுடன் தேனுடன் கலந்து சாப்பிடுவது சிறந்த பலனை தரும்.
ஐந்து பேரிச்சம் பழத்தில் 114 கலோரிகள் உள்ளது.

Categories: Udal Edai Athikarikka Tips in Tamil

Leave a Reply


Sponsors