உடல் எடை அதிகரிக்க வழிமுறைகள்,udal edai athikarikka valigal

 1. காய்ச்சிய பாலில் பூசணி விதையின் பருப்பை பொடி செய்து கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை கூடும்.
 2. நெல்லிக்காய்த் தூளை அரை தேக்கரண்டி பாலில் சாப்பிட்டு வர உடல் சதைப்பிடிப்பு கூடுதலாகும்.
 3. நத்தை சூரி விதையை அரைத்து பாலில் உட்கொண்டு வந்தால் தேக பலமுண்டாகும்.
 4. கணைச் சூட்டினால் சில குழந்தைகள் உடல் மெலிந்து நெஞ்சுக் கூடுவளர்ச்சி இன்றி மெலிவாகவும் இருப்பார்கள். அவர்களுக்கு தினமும் ஆட்டுப்பாலில் 2 தேக்கரண்டி தேன் கலந்து கொடுத்தால் கணைச் சூடு குறைந்து உடல் தேறிவிடும்.
 5. கற்கண்டு சாப்பிட்டால் இரத்தம் சுத்தமாகும். கற்கண்டை வெண்ணெய்யில் சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் பெருக்கும்.

gain weight Tips in tamil,உடல் எடை அதிகரிக்க வழிமுறைகள்,udal edai athikarikka valigal

 1. பச்சை கொண்டைக் கடலையை இரவில் தண்ணீரில் ஊற வைத்து காலையில் சாப்பிட்டுவர மெலிந்த உடல் பருமனாகும்.
 2. மருந்துக் கடைகளில் கிடைக்கும் தேற்றான் கொட்டை லேகியத்தை தினமும் இரண்டு வேளை ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வர, உடல் தேறி வலு உண்டாகும்.
 3. முட்டையில் உள்ள மஞ்சள் கருவில், அதிக அளவில் நல்ல கொழுப்பும், ஆற்றல் மிக்க கலோரிகளும் நிறைந்துள்ளது. ஆகவே தினமும் இரண்டு முட்டைகள் உண்டால், உடல் எடை வேகமாக அதிகரிக்கும்.
 4. கைக்குத்தல் அரிசியில் போதுமான அளவு கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. எனவே சீரான முறையில் கைக்குத்தல் அரிசியை உண்டால், உடலில் கார்போஹைட்ரேட்டானது சேமித்து வைக்கப்பட்டு, வேகமாக உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்.
 5. வேர்க்கடலை வெண்ணெயை ரொட்டிகளில் தடவி உண்டால், உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்.
 6. ஆளி விதை உடல் ஆரோக்கியத்தைக் காத்து, உடலை சீரான முறையில் செயல்பட உதவும். எனவே தினமும் போதுமான அளவு ஆளி விதையை உணவில் சேர்த்துக் கொண்டால், உடல் ஆரோக்கியம் பாதிக்காமல் உடல் எடையை அதிகரிக்க உதவி புரியும்.
 7. உலர் திராட்சையில் 99 கலோரிகள் அடங்கியுள்ளது. இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து, ஆரோக்கியமான கலோரிகளை அதிகரிக்கும். இதனால் வேகமாக உடல் எடை அதிகரிக்கும்.
 8. தாவர எண்ணெய் வகைகளில் வைட்டமின் “ஈ” உள்ளது. இவற்றில் சமைத்து சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும்
Loading...
Categories: Udal Edai Athikarikka Tips in Tamil, உடல் எடை அதிகரிக்க

Leave a Reply


Sponsors