ராயப்பேட்டை மட்டன் பிரியாணி,rajapattai mutton biryaniSamayal kurippu

1. மட்டன் 400 கிராம்
2, தயிர் 1 டேபிள்ஸ்பூன்
3. மிளகாய் தூள் ஒரு டேபிள்ஸ்பூன்
4. மல்லி தூள் ஒரு டேபிள்ஸ்பூன்
5. இஞ்சி பூண்டு விழுது 1 டீஸ்பூன்
6. உப்பு 1/2 டீஸ்பூன்
மேற்கூறிய அனைத்தையம் ஒன்றாக கலந்து 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
மற்ற தேவையான பொருட்கள் :
1. பாசுமதி அரிசி 2 கப் (கால் மணி நேரம் ஊற வைத்து, வடித்துக்கொள்ளவும்)
2. நெய் 1 டேபிள்ஸ்பூன்
3. எண்ணெய் 6 டேபிள்ஸ்பூன்
4. பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் 1
5. நீளவாக்கில் நறுக்கிய தக்காளி 1
6. இஞ்சி பூண்டு விழுது 2 டேபிள்ஸ்பூன்
7. மிளகாய் தூள் 1 டேபிள்ஸ்பூன்
8. மல்லி தூள் 1 டேபிள்ஸ்பூன்
9. கரம் மசாலா 1 டீஸ்பூன்
10. தயிர் 1 டேபிள்ஸ்பூன்
11. கொத்தமல்லி மற்றும் புதினா ஒரு பிடி

 

ராயப்பேட்டை மட்டன் பிரியாணி,rajapattai mutton biryaniSamayal kurippu

தாளிக்க:
1. பட்டை 1
2. கிராம்பு 3
3. அன்னாசிபூ- 1
4. பிரியாணி இலை 1
5. கல்பசி கொஞ்சம்
செய்முறை:
1. ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதில் நெய் மற்றும் எண்ணெய் கலந்து ஊற்றவும். தாளிக்க கொடுக்கபட்டுள்ள பொருட்களை 30 முதல் 40 நொடிகள் குக்கரில் தாளிக்கவும். இஞ்சி பூண்டு விழுதை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு, வெங்காயம் போட்டு வதக்கவும்.
2. மிளகாய், மல்லி, கரம் மசாலா பொருட்களை பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். இப்பொழுது கொத்தமல்லி மற்றும் புதினா சேர்க்கவும் பிரியாணி வாசனை கூட்டுவதற்காக தயிர் சேர்க்கவும். எண்ணெய் பிரியும் வரை சமைக்கவும். இக்கலவையை அடி பிடிகாமல் அடிகடி கிளறவும்.
3. இப்பொழுது மூன்று முக்கால் கப் தண்ணீர் ஊற்றவும் இக்கலவையை இரண்டு நிமிடம் சமைக்கவும். இப்பொழுது தனியாக ஒரு வானலி வைத்து அதில் எண்ணெய் உற்றவும். எண்ணெய் சூடான பிறகு, மட்டன் போட்டு 5 நிமிடம் எண்ணெய் பிரியும் வரை சமைக்கவும். இந்த மட்டன் குக்கரில் சேர்க்கவும்.இத்துடன், பாசுமதி அரிசி சேர்த்து 15 நொடிகள் கிளறி குக்கரில் மூன்று விசில் வரும் வரை வைத்து இறக்கினால் சுவையான ராயப்பேட்டை பிரியாணி ரெடி

Loading...
Categories: Biryani Recipes Tamil, Non Vegetarian Recipes Tamil, Rice Recipes In Tamil, அசைவம்

Leave a Reply


Sponsors