ஈஸி கிச்சன் டிப்ஸ்,Veettu Kurippugal in tamil font

பால் அடிப்பிடித்து, தீய்ந்த வாசனை வந்தால், அதில் ஒரு வெற்றிலையைப் போடவும். அடிப்பிடித்த வாசனை போய் விடும்.  இரண்டு வாழைப்பழம்,  சிறிது சர்க்கரையை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். அதில் ஒன்றரை டம்ளர் பால், ஒரு டம்ளர் தண்ணீர் கலந்து கொதிக்க வைக்கவும். ஏதாவது  ஒரு எசென்ஸ் ஊற்றவும். புதுமையான சுவையான பாயசம் ரெடி. அல்வா செய்யும் போது, வெண்ணெயை அரைப் பதமாக உருக்கி வைத்துக்  கொள்ளவும். அதைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து அல்வா கிளறினால், நெய் பதமாக காய்ந்து ஸ்வீட் கமகமக்கும்.

பூண்டைப் பொடியாக நறுக்கிப் பாலுடன் சேர்த்து தினமும் உட்கொண்டு வந்தால் இதயக் கோளாறு கட்டுப்படும்.வெண்ணெய் காய்ச்சி இறக்கும் போது,  அரை கரண்டி வெந்தயத்தைப் போட்டால் நெய் கமகமக்கும்.   தண்ணீருக்கு பதிலாக பால் ஊற்றி, கேசரி பவுடர் போடாமல் செய்து பாருங்கள்.  வெண்மையாக பால் கோவாவுடன் போட்டி போடும் சுவை..!

பாதுஷா செய்யப் போகிறீர்களா? சோடா, டால்டா இரண்டுடனும் கொஞ்சம் கெட்டியான புளிப்புத் தயிரும் சேர்த்துப் பிசைந்தால், பதர் பதராக  மிருதுவாக, சர்க்கரைப் பாகில் ஊறி புதுச்சுவையோடு இருக்கும். ,பீட்ரூட்டை பாலில் வேக வைத்துவிட்டு, பிறகு மசித்து செய்தால் ‘பீட்ரூட் அல்வா’  பிரமாதம்!

 

ஈஸி கிச்சன் டிப்ஸ்,Veettu Kurippugal in tamil

மோர்க்குழம்பு மீதமாகிவிட்டதா? கொஞ்சம் கடலை மாவைப் பிசைந்து உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். எண்ணெயில் பொரித்துக் குழம்போடு  சேர்க்கவும். வடைகறி மாதிரி அருமையாக இருக்கும். மோர் நிறைய மீந்துவிட்டால், அதில் ஒரு டீஸ்பூன் துவரம் பருப்பைப் போட்டு வைக்கவும்.  விரைவில் புளிக்காமலும் வாடை வராமலும் இருக்கும். கேரட் அல்வா, பீட்ரூட் அல்வா செய்யும் போது சிறிது பால் பவுடர் சேர்க்கவும்… ருசி கூடும்.

சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள அவசரத்துக்கு ஒன்றும் இல்லையா? கெட்டித் தயிரில் சிறிது சில்லி சாஸை கலந்து பரிமாறவும். அவசரத்துக்குக் கை  கொடுக்கும் இந்த அபார ருசி. குளிர் காலத்தில் உறை மோர் விடும் போது, சிறிது புளி உருண்டையைப் போட்டால் கெட்டியான தயிர் கிடைக்கும். தேங்காயை மெல்லியதாக நறுக்கி, தயிரில் போட்டு வைத்தால், இரண்டு நாட்கள் வரை கெடாமல் இருக்கும். மோர்க்குழம்பு செய்யும் போது, சிறிது  வெந்தயத்தை வறுத்துப் பொடி செய்து சேர்க்கவும். குழம்பு வாசனையாக, ருசியாக இருக்கும்.

பால் சூடாக இருக்கும் போதோ, ஆறிப் போன பிறகோ உறை ஊற்றினால் தயிர் பக்குவமாக இருக்காது. இளஞ்சூட்டோடு இருக்கும் போது உறை  ஊற்றினால், பக்குவத்தோடு கெட்டியாகவும் இருக்கும். தயிர் பச்சடியில் வெங்காயத்துக்கு பதில் கோவைக்காயை சேர்த்தால் புதுச் சுவை. ஆப்பத்துக்கு  அரைக்கும் போது, தேங்காய் தண்ணீர் சேர்க்கவும். மறுநாள் மாவு பொங்கி இருக்கும். அதில் அரை கப் சூடான பால் சேர்த்து பிறகு ஆப்பம் சுடவும்.  மென்மையாக இருக்கும்.

Loading...
Categories: Veettu Kurippugal TIps

Leave a Reply


Sponsors