எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு,ennai kathirikkai kuzhambu

தேவையானவை
கத்திரிக்காய், புளி தண்ணீர் – 1/2 கப், நல்லெண்ணெய் – 2 ஸ்பூன் , கறிவேப்பிலை, கடுகு, உளுத்தம் பருப்பு – சிறிது.
மசாலாவிற்கு – காய்ந்த மிளகாய் – 5 , வெங்காயம்(நறுக்கியது) – 1, துருவிய தேங்காய் – 1/2 கப் , வேர்கடலை – 2 ஸ்பூன், தனியா – 2 ஸ்பூன் ,மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், வெந்தயம்- 1ஸ்பூன், சீரகம் – 1ஸ்பூன் , உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை
ஒரு வானலியில் மசாலாவிற்கு தேவையான காய்ந்த மிளகாய், வேர்கடலை, தனியா, வெந்தயம், சீரகம் ஆகியவற்றை எண்ணெய் இல்லாமல் வறுக்கவும்.இதனோடு வெங்காயம், துருவிய தேங்காய், மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து வறுக்கவும்.
மற்றொரு வானலியில் எண்ணெய் ஊற்றி சிறிது வெங்காயத்தை மட்டும் வதக்கி ஏற்கனவே வறுத்தெடுத்த மசாலா பொருட்களுடன் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.

%e0%ae%8e%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%86%e0%ae%af%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%95%e0%af%81

 
கத்திரிக்காய்களை நன்கு சுத்தம் செய்து, ஒரு கத்திரிக்காயை நான்காக பிளந்துக்கொள்ளவும். (கத்திரிக்காய் தனி துண்டுகளாக பிரியாமல் பார்த்துக்கொள்ளவும்
அரைத்த மசாலாவினை கத்திரிக்காயின் உள்ளே தடவவும்
இந்த கத்திரிக்காயை தவாவில் இட்டு அறைவேற்காடாக சமைத்து கொள்ளவும் .
வானலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, மீதமிருக்கும் மசாலா, புளி தண்ணீர் ,உப்பு சேர்த்து சமைக்கவும். குழம்பு கொதி வந்ததும் கத்தரிக்காய்களை சேர்த்து,குழம்பிலிருந்து எண்ணெய் வெளிவந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும்.
எண்ணெய் கத்திரிக்காய் குழம்பினை பரிமாறும்போது நல்லெண்ணெய் ஊற்றவும்

Categories: Kuzhambu Recipes Tamil, Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Recent Recipes

Sponsors