பாவட்டை மருத்துவக் குணங்கள்,pavattai Mooligai Maruthuvam

பாவட்டை எப்பொழுதும் பச்சையாக இருக்கும் ஒரு புதர். தமிழகத்தில் எல்லாப் பகுதிகளிலும் புதர் காடுகளிலும், பெருங்காடுகளிலும் தானே வளர்கிறது. மெல்லிய காம்புள்ள இலைகளை எதிரடுக்கில் கொண்ட குறுஞ்செடிப் புதர்.

கொத்தான வெண்ணிற மலர்களை உச்சியில் கொண்டது. இது நவம்பர் டிசம்பர் மாதங்களில் பூக்கும். இது 2 அடி முதல் 4 அடி உயரம் வரை வளரக்கூடியது. இலை 6-15 செ.மீ. நீளம் இருக்கும். இதன் வெண்மையான பூக்கள் பூச்சிகளைக் கவரும். பச்சையான காய்கள் முதிர்ந்து கருப்பு நிறமாக இருண்டையாக இருக்கும். இது 6 மி.மீ. விட்டத்தைக் கொண்டது.

 

%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%a3%e0%ae%99%e0%af%8d

ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் அதிகமாகக் காணப்படும். இது விதை மூலம் இனப்பெருக்கும் செய்யப்படுகிறது.

பாவட்டை வேர் அல்லது இலை, கொன்றை, சிற்றாமுட்டி, வேலிப்பருத்தி இவற்றின் வேர், மிளகு, ஓமம் வகைக்கு10 கிராம் இடித்து 4 லிட்டர் நீரிலிட்டு அரை லிட்டராகக் காய்ச்சி வடித்து வேளைக்கு 30 மி.லி யாக தினம் 3 வேளை கொடுத்து வர வாத சுரம் போகும். பாவட்டை வேர், பூலாப்பூ சமனளவு அரைத்துக் கனமாகப் பூச அரையாப்புக் கட்டிகள் கரையும்.

பாவட்டைக் காயை சுண்டைக்காய் போலக் குழம்புகளில் சேர்த்து உண்டு வர வாத, கப நோய்கள் விரைவில் குணமாகும். பாவட்டை இலையை வதக்கி வாத வீக்கம், வலி இவற்றிற்கு இளஞ்சூட்டில் வைத்துக் கட்ட அந்நோய்கள் குணமாகும். பாவட்டக் காயிக்கு வாதசுரம், அரோசகம், சிதக்கடுப்பு, பித்தாதி சுரம், சிலேஷ்ம தோஷம் நீங்கும்.

 

இந்த காய்க்கு முத்தோஷங்களையும் கண்டிக்கின்ற குணமுண்டு. இதனை வாத சுரங்களுக்குச் சிறிது சேர்த்துப் பாயன்படுத்தலாம். இன்னும் பச்சைச் சுண்டக்காயை எப்படி குழம்புகளில் உபயோகப் படுத்துகிறார்களோ அப்படியை இதனையும் உபயோகப்படுத்துகிறார்கள்.

இதனால் கப சம்பந்தமான ரோகங்கள் வாத சம்பந்தமான ரோகங்கள் விரைவில் குணமடையும். பாவட்டை இலையால் சிலேஷ்ம வாதம், வாதகப தோஷம் ஆயாசம் தாபசுரம், திரி தோஷம் ஆகியவை குணமாகும்..

Categories: Maruthuva Kurippugal in Tamil, Mooligai Maruthuvam, மூலிகை மருத்துவம்

Leave a Reply


Recent Recipes

Sponsors