முட்டைகோஸ் சூப்,muttaikose soup in tamil

நீங்கள் ஹாஸ்டலில் தங்கி படித்திருந்தால் கண்டிப்பாக முட்டை கோஸை வெறுத்திருப்பீர்கள். ஏனெனில் விலை குறைவாக கிடைக்கிறது என்று அதிகமாக வாங்கி தினமும் சாப்பாட்டுக்கு தொடுகறியாக கொடுத்து நமது உயிரை வாங்கியிருப்பார்கள். ஆனால் முட்டைகோஸ் சூப் சாப்பிட்டிருக்கிறீர்களா?

தேவையான பொருள்கள்:

முட்டைகோஸ் – கால் கிலோ
மிளகு – அரை டீஸ்பூன்
சீரகம்- அரை டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி தழை – சிறிதளவு
மிளகு தூள் – அரை டீஸ்பூன்

cabbageb-souprecipe-tamil%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8b%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%9a%e0%af%82%e0%ae%aa%e0%af%8dmuttaikose-soup-in-tamil


செய்முறை:

முதலில் முட்டைகோஸை நன்கு கழுவி சிறியதாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
பின் கடாயில் எண்ணெய் எடுத்துக்கொண்டு அதில் மிளகு, சீரகம் ஆகியவற்றை போட்டு தாளிக்க வேண்டும்.
இதனுடன் இஞ்சி, பூண்டு விழுது மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.வதங்கிய பின்பு முட்டைகோஸ் ,ஒரு கப் தண்ணீர் சேர்த்து கல் மணிநேரம் கொதிக்கவைக்க வேண்டும்.
நன்கு கொதித்ததும் அதனை வடிகட்டி மிளகுத்தூள், கொத்தமல்லி தழை ஆகியவற்றை சேர்க்க வேண்டும். இப்ப சூப் ரெடி

Categories: Saiva samyal, Soup Recipe In Tamil, சிற்றுண்டி

Leave a Reply


Sponsors