மாதுளம் சட்னி,Pomegranate Chutney Recipe in tamil

Loading...

சூப்பர் புரூட்” என்றழைக்கப்படும் மாதுளம் பழத்தில் உடலுக்கு தேவையான அனைத்து சத்துகளும் அடங்கியுள்ளது.
ஆக்ஸிஜனேற்ற சக்தியை உடலுக்கு அளிப்பதில் மாதுளம் பழம் மிகப்பெரிய பங்காற்றுகிறது.

என்றென்றும் இளமையாக இருக்கவும், உடலில் உள்ள கொழுப்புச் சத்துகளை குறைப்பதிலும், இதயத்திற்கு உகந்த எண்ணற்ற பலன்களை அளித்து, இதய நோய்களைத் தடுப்பதிலும் முக்கிய பங்குவகிக்கிறது.
உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை மிகத் துரிதமாகவும், அதிக அளவிலும் அழித்து விடுகிறது.
தினமும் ஒரு கப் மாதுளம்பழச்சாறு குடித்து வர 15 நாட்களில் டெஸ்டோஸ்ட்ரோன் சுரப்பின் அளவு அதிகரிக்கிறது.
ஆண்களுக்கு மட்டுமல்லாது பெண்களுக்கும் தசை, எலும்பு நோய்கள், உடல்வலி, அட்ரீனலின் சுரப்பு கோளாறுகள், கருப்பை பிரச்னை போன்றவை குணமாக்குகிறது.
இத்தகைய பல்வேறான பலன்கள் கொண்ட மாதுளம் பழ முத்துகளை கொண்டு சட்னி செய்து சாப்பிடலாம்.

 

%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4%e0%af%81%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf-pomegranate-chutney-recipe-in-tamil

செய்முறை

கடாயை அடுப்பில் வைத்து சூடானவுடன் புதினா, கொத்தமல்லி, பச்சைமிளகாய், இஞ்சியை போட்டு நன்றாக வதக்கவும்.
நன்கு வதங்கியபின், சிறிது நேரம் ஆறவைத்து அதனுடன் மாதுளம் பழ முத்துகள், தேவையான அளவு உப்பு மற்றும் சீரகத் தூள் சேர்த்து மிக்சியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
இனிப்பு, புளிப்பு, காரம் கலந்த சுவையான சட்னி தயார்.

Loading...
Loading...
Categories: arokiya unavu in tamil, Chutney Recipes Tamil, Saiva samyal, சிற்றுண்டி, சைவம்

Leave a Reply


Recent Recipes

Sponsors