குக்கர் கேக்,Simple cake making in Tamil without Oven, Cookercake intamil

தேவையான பொருட்கள் :

மைதா – 1 1/2 கப்
சூரியகாந்தி எண்ணெய் – 1/2 கப்
ஆப்ப சோடா – 1/2 ஸ்பூன்
பேகிங் பவுடர் – 1/2 ஸ்பூன்
வெண்ணிலா எசன்ஸ் – 1 ஸ்பூன்
பால் – 1 கப்
பொடித்த சர்க்கரை – 1 கப்
மஞ்சள் கலர் – 1 சிட்டிகை ( விருப்பபட்டால் )
முந்திரி – தேவைக்கு
திராட்டை – தேவைக்கு
பாதாம் – தேவைக்கு
பிஸ்தா – தேவைக்கு

%e0%ae%95%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%af%87%e0%ae%95%e0%af%8dsimple-cake-making-in-tamil-without-oven-cookercake-intamil

செய்முறை :

* முந்திரி, பாதாம், பிஸ்தாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஒரு அகலமான பாத்திரத்தில் மைதா, ஆப்ப சோடா, பேகிங் பவுடர், பொடித்த சர்க்கரை அனைத்தையும் சேர்த்து நன்றாக சலித்து கொள்ளவும்.

* சலித்த மாவில் பிறகு அதில் எண்ணெய், வெண்ணிலா எசென்ஸ், மஞ்சள் கலர் சேர்த்து நன்றாக கலக்கவும்.

* பின் அதில் பாலை சேர்த்து கட்டியில்லாமல் இட்லி மாவு பதத்திற்கு நன்றாக கலந்து கொள்ளவும். மாவு கட்டியாக இருந்தால் சிறிது பால் சேர்த்து கொள்ளலாம்.

* குக்கரில் ஆத்து மணலை கால் பாகம் அளவு கொட்டி அடுப்பில் வைத்து சூடாக்கவும். (கண்டிப்பா மணல் தான் போட வேண்டும்)

* பின்னர் கேக் செய்யும் அதாவது கனமான அலுமினிய பாத்திரத்தில், ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அது எல்லா இடங்களிலும் பரவும் படி தடவவும். அதன் மேலே கொஞ்சம் மைதா மாவை தூவவும். இப்படி செய்தால் கேக் ஒட்டாமல் வரும்.

* இப்போது கேக் கலவையை அந்த பாத்திரத்தில் பாதியளவு வரும்படி ஊற்றி அதன் மேலே திராட்டை, முந்திரி, பாதாம், பிஸ்தாவை தூவி விடவும். எப்பொழுதும் கேக் பாத்திரத்தின் பாதி அளவு தான் ஊற்ற வேண்டும், அப்போது தான் கேக் வெந்தவுடன் மேலே எழும்பி வரும்.

* இப்போது குக்கரில் இந்த கேக் பாத்திரத்தை வைத்து மூடவும். விசில் போட கூடாது. குக்கர் மூடியில் உள்ள கேஸ்கட் வளையத்தைப் போட வேண்டாம். மிதமான தீயில் 30 நிமிடம் வைத்த பின் குக்கரை அணைத்து விடவும். 10 நிமிடம் கழித்து எடுத்து, சூடாக பரிமாறவும்.

* சூப்பரான குக்கர் கேக் ரெடி.

* விருப்பப்பட்டால் மேலே கிரீம் தடவி பரிமாறலாம்.

குறிப்பு  :

கேக்கின் அளவை பொறுத்து கேக் வேகும் நேரம் சற்று மாறுபடும். ஆகையால் 25 நிமிடம் கழித்தவுடன், குக்கர் மூடியை திறந்து இட்லி வெந்து இருக்கிறா என்று பார்ப்பது போல் ஒரு கத்தியால் குத்தி பார்க்கவும்.

மாவு ஒட்டாமல் வந்தால் கேக் வெந்து விட்டது அடுப்பை அணைத்து விடலாம். இல்லா விட்டால் இன்னும் சிறிது நேரம் அடுப்பில் வைக்கவும்.

குக்கரில் கேக் கலவைப் பாத்திரத்தை வைக்கும் முன், மணலை சற்று சூடு படுத்தி கொள்வது நல்லது. அப்போது தான் கேக் விரைவில் வேகும்.

விசில், கேஸ்கட் இரண்டுமே போடாததால் அதிகமான பிரஷர் உள்ளே இருக்காது அதனால் safety value ஒன்றும் ஆகாது.

Categories: cake samayal kurippugal in tamil

Leave a Reply


Recent Recipes

Sponsors