சமையலுக்கு தேவையான குறிப்புகள்

பன்னீர் கடினம் : – 
பன்னீர் கடினமாகி விட்டால் மீண்டும் மிருதுவாக மாற்ற சிறிது நேரம் வென்னீரில் வைக்கலாம்.
முட்டை : – 
முட்டைகளை தண்ணீர்ல் வைத்தால் நல்ல முட்டை பாத்திரத்தின் அடியில் இருக்கும். கெட்டுப்போன முட்டையின் குறுகிய முனை பாத்திரத்தின் அடியைத் தொட்டுக் கொண்டு இருக்கும்.
ஈரமான பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி கலக்கினால் வெள்ளைக்கரு பாத்திரத்தில் ஒட்டி வீணாவதைத் தவிர்க்கலாம். சில முட்டையை உடைத்து ஊற்றும்போது மஞ்சள், வெள்ளைக் கருவுடன் சிவப்பு நிறத்தில் இரத்தம் போன்று கலந்து இருக்கும்.
அப்படியிருந்தால் உபயோகிக்கக்கூடாது. முட்டை தயார் செய்த பாத்திரங்களை குளிர்ந்த தண்ணீரில் ஊறப்போட்டு உடனே கழுவ வேண்டும்.
%e0%ae%9a%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%b2%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%aa
மீன் சமைக்க : -. 
ஆற்று மீனின் சேற்று வாடை போவதற்கு மீனை உப்புப் போட்ட தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். உலர்த்திய மீனை சமைப்பதற்கு முன் நன்றாக கழுவி சில மணி நேரம் குளிர்ந்த தண்ணீரில் ஊற வைக்கவும்.

மீனை கனமான துண்டுகளாக வெட்டி மிளகு, எலுமிச்ச பழச்சாறு, உப்பு சேர்த்து சுத்தமான காகிதத்தில் டால்டா தடவி அதில் மீனைச் சுற்றி இட்லிப்பானை ஆவியில் வேகவைத்து வெந்ததும் சூடாக சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
இறைச்சி சமைக்க : – 
ஆட்டிறைச்சி புதியதாக இருந்தால் உறைந்த பாலாடை போன்ற கொழுப்போடும், இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். உடைந்த எலும்பின் உட்பாகம் வெண்மையாக இருக்கும்.
கடினமான சமைக்காத கறியை எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து ஊறவைத்தால் மிருதுவாகிவிடும். அசைவ சாப்பாடு சாப்பிட்ட பிறகு எலுமிச்சம் பழச்சாறு குடித்தால் எளிதில் ஜீரணமாகும்.
வாங்கக்கூடாது : – 
மஞ்சள் நிறம் கொண்ட எண்ணெய் மயமான கொழுப்புடையதும், உளம் ஊதா நிறம் கொண்ட மாமிசத்தையும் வாங்கக் கூடாது.
டீ தூள் மனம் மாறாமல் இருக்க : – 
டீத்தூள் வைத்திருக்கும் பாட்டிலில் உபயோகித்த ஏலக்காய் தோல்களைப் போட்டு வைத்திருந்தால் டீ ஏலக்காய் மணதோடு சுவையாக இருக்கும்.
வடகம் நமத்து போகாமல் இருக்க : – 
மழை, குளிர் காலங்களில் வடகம் நமத்துப் போய் நன்றாகப் பொரியாது வெறும் வானலியை அடுப்பில் வைத்து சூடேற்றி அதில் வடகத்தைப் போட்டு சற்று புரட்டி எடுத்து விட்டு எண்ணெயில் பொரித்தால் நன்றாகப் பொரியும்.
தேங்காய் சட்னி சுவையாக இருக்க : – 
தேங்காய் சட்னி மிகவும் சுவையாக இருக்க நாம் அரைக்கும் சட்னியில் பாதி தேங்காயும், பாதி கொத்துமல்லியையும் சேர்த்து அரைத்தால் மிகவும் ருசியாக இருக்கும்.
வெங்காய ஊத்தாப்பம் செய்யும்போது : – 
வெங்காய ஊத்தாப்பம் செய்யும்போது தோசை இருபுறமும் வெந்து இருந்தால்தான் சுவையாக இருக்கும். தோசையின் நடுப்பகுதியில் சிறு ஓட்டை செய்து எண்ணெய் ஊற்றினால் விரைவில் வெந்தும், சுவையாகவும் இருக்கும்.
சாதம் மணக்க : – 
சாதம் தயாரானதும் சுடச்சுட அதில் ஒரு தேக்கரண்டி நெய் சேருங்கள். இது, சாதத்துக்கு ஓர் அருமையான மணம் கொடுக்கும்.
எலுமிச்சை பழம் பிழியும் முன்பு : – 
எலுமிச்சையிலிருந்து அதிகமான சாறைப் பெற அதை கையால் சமையல் மேடையில் நன்கு உருட்டித் தேயுங்கள். பின்னர் பிழியுங்கள்.
சோளத்தை அவிக்கும் போது : – 
சோளத்தை அவிக்கும் போது அதன் இனிப்பைவெளிக் கொண்டு வர சிறிது சர்க்கரையைச் சேருங்கள்.
சப்பாத்தி மாவு ஒட்டாமல் இருக்க : – 
சப்பாத்திக் கட்டையில் மாவு ஒட்டிக்கொள்ளாமல் இருக்க, மாவு தேய்ப்பதற்கு முன் சிறிதுநேரம் பிரீசரில் வைத்து எடுத்துப் பயன்படுத்துங்கள்.
கீரையை வேக வைக்கும்போது : – 
கீரையை வேக வைக்கும்போது அதன் பசுமை நிறம் மாறாமலிருக்க ஆப்ப சோடா ஒரு சிட்டிகை போடவும். அல்லது கீரையை சமைப்பதற்கு முன்பு ஒரு டீஸ்பூன் சர்க்கரையைச் சேர்த்து சமைத்தால் கீரையின் பச்சை வண்ணம் மாறாமல் இருக்கும்.
தேயிலைத் தூள் மணக்க : – 
ஏலக்காய் தோலை தேயிலைத் தூளுடன் போட்டு வைத்தால் தேயிலைத் தூள் ஏலக்காய் மணத்துடன் கம கமவென்று இருக்கும்.
முள்ளங்கி வாங்கும்போது : – 
முள்ளங்கி வாங்கும் போது அதன் நிறம் நல்ல சிகப்பாக இருக்கும் படியாகப் பார்த்து அதை வாங்க வேண்டும். அவ்வாறு வாங்கிய முள்ளங்கி எவ்வளவு சிகப்பாக இருக்கிறதோ அவ்வளவு வைட்டமின் ‘ஏ’ சத்து இருப்பதாக அர்த்தம்.
மைக்ரோ வேவ் : – 
மைக்ரோ வேவ் அவனில் எண்ணேய் வைத்து பொரிக்கக் கூடாது. இதனால் எண்ணெய்யின் உஸ்ணத்தை கட்டுப்படுத்த முடியாது.
வறுத்து சாப்பிடுவது : – 
எதையுமே கருக வறுத்து சாப்பிடுதல் நல்லதல்ல. புற்று நோய்க்கு அதெல்லாம் காரணமாகி விடும். மோர் மிளகாயை கூடிய வரையில் மிதமாக வறுக்க வேண்டும். தீய்ந்ததில் தான் புற்று நோய் வரும் வாய்ப்பு அதிகம்.
சப்பாத்தி தோசை அடை வடை என்று எதையுமே தீய்க்கத் தேவை இல்லை. மிகப் பழைய சுண்டை கொத்தவரை வற்றல் இவைகளில் புற்று நோய் ஊக்குவிப்பான்கள் ஒளிந்து இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றன.
Loading...
Categories: Veettu Kurippugal TIps

Leave a Reply


Sponsors