புண்களை ஆற்றும் மரமல்லி,maramalli Mooligai Maruthuvam

நமக்கு எளிதில், அருகில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் இருக்கும் உணவுப் பொருட்கள் போன்றவற்றை பயன்படுத்தி பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், சாலையோரங்களில் அழகான வெள்ளைநிற பூக்களை சுமந்து நிற்கின்ற, நல்ல மணத்தை உடைய மரமல்லியின் மருத்துவ குணத்தை பார்க்கலாம். புண்களை ஆற்றும் தன்மை கொண்ட மரமல்லி, காய்ச்சல், மூட்டு வலி, ஆஸ்துமா, இருமல் போன்ற பிரச்னைகளுக்கு மருந்தாகிறது. மரமல்லி மலர் இரவு நேரத்தில் பூத்து காலையில் உதிர்ந்துவிடும். இது, அற்புதமான மருத்துவ குணங்களை கொண்டது.

மரமல்லி இலைகளை பயன்படுத்தி காய்ச்சல், மூட்டுவலியை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: மரமல்லி இலைகள், மிளகு, பனங்கற்கண்டு. செய்முறை: மரமல்லி இலைகளை ஒருபிடி அளவுக்கு எடுக்கவும். இதில், 5 மிளகு தட்டிபோடவும். சிறிது பணங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர குடல் பகுதியில் உள்ள தொற்று, வாயில் ஏற்படும் தொற்றுகளை அழிக்கும். காய்ச்சல், மூட்டுவலி குணமாகும். மரமல்லி இலைகளை கொதிக்க வைத்து கழுவதால் புண்கள் சரியாகும்.    வேம்பை போன்ற இலைகளை உடைய மரவல்லி, பூஞ்சை காளான்களை போக்குகிறது. நுண்கிருமிகளை அழிக்கிறது. பூச்சிகளை வெளியேற்றும் தன்மை கொண்டது. காய்ச்சலை தணிக்க கூடியது. உடல் வலியை போக்கவல்லது.

பல்வேறு நன்மைகளை கொண்ட மரமல்லி, குளிர்காலத்தில் அதிக மலர்களை தரக்கூடியது. இதன் பூ, இலை, வேர், பட்டை என அனைத்து பாகங்களும் மருந்தாகிறது. மரமல்லி மரப்பட்டையை பயன்படுத்தி இருமல், ஆஸ்துமா, நுரையீரல் தொற்றை சரிசெய்யும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: மரமல்லி மரப்பட்டை, சுக்குப்பொடி. செய்முறை: மரமல்லி மரப்பட்டையின் மேல் தோலை சீவிவிட்டு பட்டையை சிறு துண்டுகளாக்கி கொள்ளவும். இதனுடன் கால் ஸ்பூன் சுக்குப்பொடி சேர்க்கவும். ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிக்கட்டி காலை, மாலை என இருவேளை குடித்துவர ஆஸ்துமா, நெஞ்சக சளி, எலும்புருக்கி நோய்கள் குணமாகிறது.

 

YT_Maramalli

YT_Maramalli

மரமல்லி பூக்களை கொண்டு புண்களை ஆற்றும் தைலம் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: மரமல்லி பூக்கள், தேங்காய் எண்ணெய். ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் எடுக்கவும். இதனுடன் மரமல்லி பூ பசையை சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். இந்த தைலத்தை மேல்பூச்சாக போடும்போது ஒவ்வாமையால் ஏற்படும் கிருமிகளின் தாக்கம் குறையும். பால்வினை நோயால் ஏற்படும் புண்கள் ஆறும். அக்கி புண்கள் விரைவில் குணமாகும். மரமல்லி பூக்களை தேனீராக்கி குடிப்பதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும்.முகத்தில் ஏற்படும் சுருக்கத்தை போக்கும் பாதுகாப்பான மருத்துவம் குறித்து பார்க்கலாம். முகத்தில் ஏற்படும் சுருக்கத்துக்கு வாழை பழம் அற்புதமான மருந்தாகி பயன் தருகிறது. வாழைப் பழத்தை தோலுடன் நன்றாக பசையாகி கொள்ளவும். இதனுடன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து கலந்து முகத்தில் பூசிவைத்து சிறிது நேரம் கழித்து கழுவிவர முகச்சுருக்கம் நீங்கி பொலிவு பெறும்.

Loading...
Categories: Mooligai Maruthuvam, மூலிகை மருத்துவம்

Leave a Reply


Sponsors