முருங்கை பூ சூப்,murungai poo soup Seimurai tamil font

தேவையான பொருட்கள் :

முருங்கை பூ – 2 கைப்பிடி
புளி – சிறிய எலுமிச்சை பழ அளவு
தக்காளி – 1
ரசப்பொடி – 2 தேக்கரண்டி
வேகவைத்த துவரம் பருப்பு – 2 தேக்கரண்டி
உப்பு – சுவைக்கு

தாளிக்க :

மிளகு – 1 தேக்கரண்டி
சீரகம் – அரை தேக்கரண்டி
நெய் – 1 தேக்கரண்டி

 

%e0%ae%ae%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%aa%e0%af%82-%e0%ae%9a%e0%af%82%e0%ae%aa%e0%af%8dmurungai-poo-soup-seimurai-tamil-font

செய்முறை :

* தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* துவரம் பருப்பை சிறிதளவு நீரில் கரைத்து கொள்ளவும்.

* மிளகை கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.

* புளியை சிறிதளவு நீரில் கரைத்து கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் கரைத்த புளி கரைசல், முருங்கை பூ, தக்காளி, ரசப்பொடி கலந்து நன்கு அடுப்பில் வைத்து கொதிக்க வையுங்கள்.

* அடுத்து அதில் பருப்பு கரைசல், உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்.

* கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் தாளிக்க வேண்டிய பொருட்களையும் சேர்த்து தாளித்து சூப்பில் சேருங்கள்.

* சூப்பரான முருங்கை பூ சூப் ரெடி.

* இதை சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். சூப்பாகவும் பருகலாம்.

* சளி, இருமலுக்கு சுவையான மருந்து இது.

Loading...
Categories: Soup Recipe In Tamil, சிற்றுண்டி, சைவம்

Leave a Reply


Sponsors