பார்வையை தெளிவுபடுத்தும் பொன்னாங்கண்ணி,ponnanganni Mooligai Maruthuvam

எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், சமையலறையில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு  பக்கவிளைவில்லாத எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், பொன்னாங்கண்ணி கீரையின் மருத்துவ குணங்களை காணலாம். பல்வேறு நன்மைகளை உடைய இதில், நாட்டு பொன்னாங்கண்ணி, சீமை பொன்னாங்கண்ணி, சிவப்பு பொன்னாங்கண்ணி என 3 வகைகள் உள்ளன.

பொன்னாங்கண்ணி கீரை உள் உறுப்புகளை பலப்படுத்த கூடியது. நோய் வராமல் தடுக்கும் தன்மை உடையது. புற்றுநோயை உண்டாக்கும் நச்சுக்களை வெளித்தள்ளுகிறது. கொழுப்பு சத்தை குறைக்க கூடியதாக விளங்குகிறது.
நாட்டு பொன்னாங்கண்ணியை பயன்படுத்தி கண்பார்வையை தெளிவுபடுத்தும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: பொன்னாங்கண்ணி, பனங்கற்கண்டு, பால்.

பொன்னாங்கண்ணியை நன்றாக அரைத்து 20 மில்லி அளவுக்கு சாறு எடுக்கவும். இதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும். பின்னர், காய்ச்சிய பால் சேர்த்து வடிகட்டி குடித்துவர மஞ்சள் காமாலை மறைந்து போகும். உடலுக்கு குளிர்ச்சி ஏற்படும். கண் நரம்பு, தசைகளை பலப்படுத்தும். பார்வையை கூர்மையாக்கும்.பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட பொன்னாங்கண்ணி அற்புதமான கண் மருந்தாகி பலன் தருகிறது.

 

%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%af%88-%e0%ae%a4%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae

ஈரலுக்கு பலம் தருவதாக அமைகிறது. புரதச்சத்து நிறைந்தது.  ரத்த சோகையை போக்க கூடியது. சர்க்கரை நோயை தணிக்கிறது. வைட்டமின் ‘ஏ’ குறைப்பாட்டை சரிசெய்கிறது. பொன்னாங்கண்ணி கீரையை கொண்டு உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய தைலம் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: நல்லெண்ணெய், பொன்னாங்கண்ணி கீரை. ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் விடவும்.

இதனுடன் பொன்னாங்கண்ணி கீரை பசையை சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். வடிகட்டி வாரம் ஒருமுறை  தலைக்கு தேய்த்து குளித்துவர கண்கள் குளிர்ச்சி பெறும். கண்களில் ஏற்படும் சிவப்பு தன்மை மாறும். உடல் குளிர்ச்சி பெறும். அன்றாடம் உண்ண கூடிய கீரைகளில் பொன்னாங்கண்ணியும் ஒன்று. உடலை பளபளப்பாக்கும். குளிர்ச்சி உடைய இது மிகுந்த சத்துக்களை உள்ளடக்கியது. ரத்த சோகையை போக்கும்.

பொன்னாங்கண்ணியை பயன்படுத்தி தோலுக்கு பொலிவு தரும் மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: பச்சை பயறு, கஸ்தூரி மஞ்சள், பொன்னாங்கண்ணி கீரை, பால். ஒரு பாத்திரத்தில் பச்சை பயறு மாவு எடுக்கவும். சிறிது கஸ்தூரி மஞ்சள் சேர்க்கவும். இதனுடன் பொன்னாங்கண்ணி கீரை சாறு, பால் சேர்க்கவும். இதை நன்றாக கலந்து முகப்பூச்சாக பயன்படுத்தலாம். தோல் வறட்சியாக இருக்கும் இடத்தில் பூசினால் வறட்சி நீங்கி தோல் பொலிவு பெறும். தோல்களில் உள்ள சுருக்கம் சரியாகும்.

பொன்னாங்கண்ணி கீரையை அடிக்கடி சாப்பிடுவதால் உடல் பொலிவு பெறும். கண் பிரச்னைகள் விலகி போகும். இதை பயன்படுத்துவது என்பது ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கும். மழைக்காலங்களில் நகத்தில் ஏற்படும் தொற்று, வலிக்கான மேல் பூச்சு மருந்து தயாரிக்கலாம். அவரை இலையை அரைத்து சிறிது மஞ்சள், சுண்ணாம்பு சேர்த்து கலந்து நகத்தில் பற்றாக பூசிவர நகத்தில் ஏற்படும் சொத்தை சரியாகும். நகங்கள் ஆரோக்கியம் பெறும்.

Loading...
Categories: Mooligai Maruthuvam, மூலிகை மருத்துவம்

Leave a Reply


Sponsors