தோள்பட்டை வலியை போக்கும் மருத்துவம்,thol pattai vali neenga maruthuvam

, தோள்பட்டை வலி, பிடிப்பு பிரச்னைகளுக்கு தீர்வு குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் பார்க்கலாம். சர்க்கரைநோய், வயது முதிர்வு, கீழே விழுவது, மாதவிலக்கு நிற்பது போன்றவற்றால் தோள்பட்டை வலி, பிடிப்பு பிரச்னைகள் ஏற்படும்.

தோள்பட்டை வலி, பிடிப்பு காரணமாக கைகளை மேலே தூக்க முடியாமல் போகிறது. தோள்பட்டை வலியால் கழுத்தை திருப்புவதில் சிரமம் ஏற்படுகிறது. இப்பிரச்னைகளுக்கு முருங்கை, எருக்கு, துத்தி, பூண்டு ஆகியவை மருந்தாகிறது. பல்வேறு நன்மைகளை கொண்ட முருங்கை வலி நீக்கும் மருந்தாக விளங்கிறது. எருக்கு வலி போக்கும் தன்மை உடையது. புண்களை ஆற்றும்.

வீக்கத்தை கரைக்கும் மேல்பூச்சு மருந்தாக விளங்குகிறது. துத்தி செடி மஞ்சள் நிற பூக்களை உடையது. வலி நிவாரணியாக விளங்குகிறது. தோள்பட்டை வலி, பிடிப்புக்கான மேல்பூச்சு மருந்துகளை பார்க்கலாம். முருங்கை, எருக்கன் இலையை பயன்படுத்தி மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: முருங்கை இலை, எருக்கு இலை, இஞ்சி. செய்முறை: முருங்கை இலை, எருக்கு இலையை நீர்விட்டு அரைத்து எடுக்கவும். இந்த கலவையுடன் இஞ்சி விழுது சேர்த்து சூடு பண்ணவும்.

இளஞ்சூட்டுடன் வலி இருக்கும் இடத்தில் பற்றாக வைத்து சிறிது நேரம் கழித்து வெந்நீரில் கழுவினால் தோள்பட்டை வலி, பிடிப்பு குறையும். எலும்புகளுக்கு பலம் ஏற்படும். பூண்டை பயன்படுத்தி தோள்பட்டை வலிக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கடுகு எண்ணெய், பூண்டு. செய்முறை: பாத்திரத்தில் கடுகு எண்ணெய் எடுக்கவும். இதனுடன் நசுக்கி வைத்திருக்கும் பூண்டு சேர்த்து தைலமாக காய்ச்சவும். இதை ஆறவைத்து வடிகட்டி தோள்பட்டையில் பூசிவிட்டு சிறிது நேரம் கழித்து கழுவினால் வலி, வீக்கம் சரியாகும்.

%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b3%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d
ரத்தக்கட்டு கரைந்து போகும். துத்தி இலைகளை பயன்படுத்தி தோள்பட்டை வலிக்கான ஒத்தடம் கொடுக்கும் முறை குறித்து பார்க்கலாம். துத்தி இலைகளை சிறு சிறு துண்டுகளாக்கி தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைக்கவும். மெல்லிய துணியை இந்த சுடுநீரில் நனைத்து ஒத்தடம் கொடுக்கலாம். தோள்பட்டை வலி மட்டுமின்றி மூட்டுவலியும் குணமாகும். வீக்கத்தை கரைக்கும். வலியை தணிக்க கூடியது. துத்தி அற்புதமான மூலிகை. இதன் வேர் பகுதி சிறுநீர் பழுதாவதை தடுக்க பயன்படுகிறது.

இதன் இலைகள் மூலத்தினால் ஏற்படும் பிரச்னைகளை சரிசெய்யும் தன்மை கொண்டது. துத்தியின் பூக்கள் மஞ்சள் நிறமுடையது. காய்கள் கதிர்போன்று இருக்கும். சாலையோரங்களில் மிகுதியாக கிடைக்கும். ரத்தபோக்கை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. ஆசனவாயில் ரத்தம் கசிவதை நிறுத்தும் மருத்துவம் குறித்து பார்க்கலாம்.

ஆசனவாயில் புண் ஏற்படுவதாலும், உள் மூலமாக இருக்கும்போதும் ரத்தம் வரும். தசைகளில் ஏற்படும் வெடிப்பு, ஆசனவாயை சுற்றி கொப்பளங்களால் ரத்த கசிவு ஏற்படும். இப்பிரச்னைக்கு கடுக்காய் நல்ல மருந்தாகிறது. கடுக்காய் சூரணத்தை சிறிது எடுத்துகொள்வதாலும், சூரணத்தை மேல்பற்றாக பூசுவதாலும் ரத்தக்கசிவு நிற்கும். புண்கள் ஆறும்.

Loading...
Categories: Maruthuva Kurippugal in Tamil

Leave a Reply


Sponsors