வாய்ப்புண்ணை குணப்படுத்தும் மருத்துவம்,vai punnu marunthu in tamil

அருகில், எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், வீட்டில் இருக்கும் உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான, பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், வாய்ப்புண் பிரச்னையை தீர்ப்பது குறித்து காணலாம். அகத்திக்கீரை, சின்னவெங்காயம், திரிபலா சூரணம், நல்லெண்ணெய் ஆகியவை வாய்ப்புண்ணுக்கு மருந்தாகிறது. நாக்கு, கன்னத்தின் உட்பகுதியில் வாய்ப்புண் ஏற்படும். வாய்ப்புண் காரணமாக நாக்கின் அடியில் ஆங்காங்கே கொப்புளங்கள் வரும். இதனால் வலி, சாப்பிட முடியாத நிலை ஏற்படுகிறது.

திரிபலா சூரணத்தை பயன்படுத்தி வாய்ப்புண்ணுக்கான மருந்து தயாரிக்கலாம். ஒரு பாத்திரத்தில் நீர்விட்டு ஒரு ஸ்பூன் திரிபலா சூரணம் சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை ஆறவைத்து காலை, மாலை என இருவேளை வாய் கொப்பளிப்பதன் மூலம் வாய்ப்புண் விரைவில் ஆறும். இந்த தேனீரை இரவு நேரத்தில் சிறிது பருகுவதால் அல்சர் சரியாகும். இது வாய் புண்களால் ஏற்படும் எரிச்சலை போக்கி குளிர்ச்சியை தருகிறது. திரிபலா சூரணம் என்பது கடுக்காய், தான்றிகாய், நெல்லிக்காய் ஆகியவை சேர்ந்த கலவையாகும்.

 

%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%88-%e0%ae%95%e0%af%81%e0%ae%a3%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d

பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட திரிபலா சூரணம் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். சின்ன வெங்காயத்தை பயன்படுத்தி வாய்புண்ணை குணப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: நல்லெண்ணெய், சீரகப்பொடி. செய்முறை: பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் எடுக்கவும். இதில் அரை ஸ்பூன் சீரக பொடி சேர்த்து வதக்கவும். இதனுடன் அரை டம்பளர் அளவுக்கு சின்ன வெங்காய சாறு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை ஆறவைத்து காலையில் வெறும் வயிற்றில் 3 நாட்கள் குடித்துவர வாய்புண் குணமாகும்.

நல்லெண்ணை பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. நல்லெண்ணெய் காலையில் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வருவதால் உடல் உஷ்ணம் தணியும். தசை பிடிப்பு சரியாகும். வற்றிய கன்னத்தை சரிசெய்யும் தன்மை கொண்டது. அகத்தி கீரையை பயன்படுத்தி வாய்ப்புண் பிரச்னைக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: அகத்தி கீரை, நல்லெண்ணெய். செய்முறை: ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் எடுக்கவும்.

இதனுடன் அகத்தி கீரை விழுதை சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். ஆறவைத்து எடுத்து வைத்துக் கொண்டு வாயில் புண் ஏற்படும்போது மேல்பூச்சாக போடுவதாலும், அரை ஸ்பூன் அளவுக்கு சாப்பிட்டு வந்தாலும் வாய்ப்புண் ஆறும். அதிகளவு சத்துக்களை கொண்ட அகத்தி கீரை உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. பூச்சிகளை அழிக்கும் தன்மை உடையது.
எளிதில் கிடைக்க கூடிய அகத்தி கீரை, நல்லெண்ணெய், வெங்காயம் போன்றவற்றை பயன்படுத்தி வாய்ப்புண் பிரச்னையை வீட்டில் இருந்தபடியே சரிசெய்யலாம்.

பனி, மழைக்காலத்தில் தோல் வறண்டு சாம்பல் பூத்தது போல் இருக்கும். இப்பிரச்னைக்கான மருத்துவம் குறித்து பார்க்கலாம். மாம்பருப்புடன், பாசிபயறு மாவு சேர்த்து அரைத்து உடலுக்கு பூசி குளித்தால் தோல் மென்மை பெறும். தோலுக்கு எண்ணெய் பசை கிடைக்கும். தோல் அழகு பெறும்.

Loading...
Categories: Maruthuva Kurippugal in Tamil

Leave a Reply


Sponsors