கறிவேப்பிலை மிளகு குழம்பு,curry leaves kuzhambu in tamil

சுண்டைக்காய் வற்றல் – 1 கப்,
மிளகு – 5 டீஸ்பூன்,
பூண்டு – 5 பற்கள்,
தனியா – 1 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 2 அல்லது 3,
வெந்தயம் – 1 டீஸ்பூன்,
புளி – ஒரு எலுமிச்சைப்பழ அளவு,
கறிவேப்பிலை – ஒரு கொத்து,
நல்லெண்ணெய் – 6 டீஸ்பூன்,
எள் – 1 டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை,
உப்பு – தேவையான அளவு.

curry-leaves-kuzhambu-in-tamil
கடாயில் 1 டீஸ்பூன் நல்லெண்ணெயை ஊற்றி மிளகு, பூண்டு, தனியா, காய்ந்த மிளகாய், வெந்தயம், எள்ளை வறுத்துக் கொள்ளவும். விரும்பினால் கறிவேப்பிலையையும் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். ஆறியதும் மிக்சியில் போட்டு, தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் ஊற்றி நைசாக அரைக்கவும். இந்தக் கலவையை கெட்டியாக கரைத்த புளிக்கரைசலில் கலந்து வைக்கவும்.

மற்றொரு கடாயில் 5 டீஸ்பூன் நல்லெண்ணெயை காயவைத்து கடுகு, பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் தாளித்து, சுண்டைக்காய் வற்றலைப் போட்டு பொரித்துக் கொள்ளவும். விரும்பினால் சிறிய அப்பளத்துண்டுகளையும் போட்டு பொரித்துக் கொள்ளலாம். பின்பு இதன் மேல் மசாலா கலவையை ஊற்றி, உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும். சூடாக சாதத்துடன் பரிமாறவும்.

Loading...
Categories: Kuzhambu Recipes Tamil, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors