மஷ்ரூம் சாண்ட்விட்ச்சிற்றுண்டி,mushroom sandwich recipe indian tamil

மஷ்ரூம் – 50 கிராம்,
சின்ன வெங்காயம் – 10,
தக்காளி – 2,
இஞ்சி,
பூண்டு விழுது – 1 டீஸ்பூன்.
குடைமிளகாய் – 1,
உப்பு – தேவைக்கேற்ப,
கரம் மசாலா – அரை டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்,
நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்,
பிரெட் ஸ்லைஸ் – தேவைக்கேற்ப,
கொத்தமல்லி – 1 கைப்பிடி,
புதினா – அரை கட்டு.
%e0%ae%ae%e0%ae%b7%e0%af%8d%e0%ae%b0%e0%af%82%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1

செய்முறை :
முதலில் காளானைக் கழுவி சுத்தம் செய்து, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எண்ணெயுடன் சேர்த்து வதக்கவும். அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, நறுக்கிய வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், மஞ்சள் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து வதக்கி இறக்கவும். கொத்தமல்லி, புதினா சேர்த்துக் கிளறி இறக்கவும். இந்தக் கலவையை பிரெட்டில் வைத்து சாண்ட்விட்ச் செய்யவும். கொத்தமல்லி சட்டினி (அல்லது) புதினா சட்னி தொட்டுக் கொள்ள ஏற்றது.
இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் டி, புரதம் மற்றும் ஃபோலிக் ஆசிட் அதிகமாக உள்ளது. ரத்த ஓட்டத்துக்கும் கூரிய பார்வைக்கும் வழிவகுக்கும்.

Loading...
Categories: Tamil Cooking Tips, சிற்றுண்டி, சைவம்

Leave a Reply


Sponsors