பன்னீர் காய்கறி குருமா,paneer veg kurma in tamil

பன்னீர் – 1/2 கப்
வெங்காயம் – 1/2
கேரட் – 2
பட்டாணி – சிறிது
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை – 1 டீஸ்பூன்
எண்ணெய் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கிராம்பு – 2
பட்டை – 1

அரைக்க…

தேங்காய் – 1/2 கப்
பச்சை மிளகாய் – 2
பெருஞ்சீரகம் – 1/2 தேக்கரண்டி
முந்திரி – 5
வெங்காயம் – 1

%e0%ae%aa%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%95%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%bepaneer-veg-kurma
கேரட் மற்றும் பட்டாணியை முதலில் வேக வைக்கவும். ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு பன்னீரை பொன்னிறமாக வறுத்து வைக்கவும். இப்போது அதே கடாயில் வெங்காயம், துருவிய தேங்காய் சேர்த்து வதக்கி ஜாரில் எடுத்து அத்துடன் பச்சை மிளகாய், பெருஞ்சீரகம், முந்திரி சேர்த்து அரைத்து வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கிராம்பு, பட்டை, இஞ்சி பூண்டு பேஸ்ட், வெங்காயம் சேர்த்து வதக்கி பின் அரைத்த மசாலா கலவையை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை சமைக்கவும். 3/4 கப் தண்ணீர் சேர்த்து 3 நிமிடங்கள் கொதிக்க விடவும். வேக வைத்த கேரட், பட்டாணி, வறுத்த பன்னீர் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு 5-7 நிமிடங்கள் வேக விடவும். கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

Loading...
Categories: Kuzhambu Recipes Tamil, Saiva samyal, சைவம்

Leave a Reply


Sponsors