பொங்கல் புளிக் குழம்பு,pongal puli kulambu

பரங்கிக்காய் – 1/2 கப் உருளைக்கிழங்கு – 1/2 கப் அவரைக்காய் – 1/2 கப் மொச்சை – 1/2 கப் சர்க்கரை வள்ளிக் கிழங்கு – 1 சின்ன வெங்காயம் – 10 தக்காளி – 2 (நறுக்கியது) பூண்டு – 10 பற்கள் புளி – 1/4 கப் வெல்லம் – 1/2 டேபிள் ஸ்பூன் துவரம் பருப்பு – 1/4 கப் (வேக வைத்து மசித்தது) மிளகாய் தூள் – 2 டீஸ்பூன் மல்லித் தூள் – 2 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு தாளிப்பதற்கு… சீரகம் – 1 டீஸ்பூன் வடகம் – 1/4 டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிது

%e0%ae%aa%e0%af%8a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81pongal-puli-kulam
செய்முறை:
முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் மொச்சையைப் போட்டு, அதில் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கி தனியாக வைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், வடகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பின் பூண்டு மற்றும் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, தக்காளியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பிறகு அதில் அவரைக்காய், உருளைக்கிழங்கு மற்றும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு சேர்த்து 2 நிமிடம் வதக்கி, பின் மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து பிரட்டி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கிளறி, காய்கறிகளை நன்கு வேக வைக்க வேண்டும். காய்கறிகளானது நன்கு வெந்ததும், அதில் பரங்கிக்காயை சேர்த்து, மேலும் சிறிது தண்ணீர் ஊற்றி பரங்கிக்காயை வேக வைக்க வேண்டும். அனைத்து காய்கறிகளும் நன்கு வெந்ததும், அதில் மசித்து வைத்துள்ள துவரம் பருப்பு, வெல்லம் சேர்த்து கிளறி, 1/4 கப் புளிச்சாறு மற்றும் 1 கப் தண்ணீர் ஊற்றி கிளறி, பின் வேக வைத்துள்ள மொச்சையை சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். குழம்பானது ஓரளவு கெட்டியானதும், அடுப்பை அணைத்து இறக்கினால், பொங்கல் புளிக் குழம்பு ரெடி!!

Loading...
Categories: Kuzhambu Recipes Tamil, Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors