வாழைக்காய் ரோஸ்ட்,Valakkai Varuval Roast Samayal kurippu

தேவையான பொருட்கள்:
வாழைக்காய் – 2
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
மசாலாவிற்கு…
தேங்காய் – 3 டேபிள் ஸ்பூன் (துருவியது)
சோம்பு – 1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
சீரகப் பொடி – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு

%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b0%e0%af%8b%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%8dvalakkai-varuval-roast-samayal-kurippu

செய்முறை:
முதலில் வாழைக்காயின் தோலை நீக்கிவிட்டு, அதனை நீளமான துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட்டு, பின் அதில் வாழைக்காயை சேர்த்து, 3-4 நிமிடம் வாழைக்காயை வேக வைத்து, நீரை வடிகட்டி, வாழைக்காயை குளிர வைக்க வேண்டும்.
பின்பு மசாலாவிற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு, நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பிறகு அந்த மசாலாவை வாழைக்காயில் போட்டு பிரட்டி, 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
இறுதியில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஊற வைத்துள்ள வாழைக்காயை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுத்தால், வாழைக்காய் ரோஸ்ட் ரெடி!!!

Loading...
Categories: Saiva samyal, Tamil Cooking Tips, சிற்றுண்டி, சைவம்

Leave a Reply


Sponsors