மனைவி கருத்தரிக்க முயலும் போது, கணவன்மார்கள் தவறாமல் செய்ய வேண்டியவைகள்!

பொதுவாக கருத்தரிக்க முயலும் போது, ஆண்களை விட பெண்கள் தான் அதிக அக்கறை காண்பிப்பார்கள். ஆனால் கருத்தரிப்பதில் பெண்களுக்கு இணையாக ஆண்களும் அக்கறை எடுத்து முயற்சிக்க வேண்டும். இதனால் எளிதில் கருத்தரிக்க முடியும். ஒரு பெண் கருத்தரிக்க முயற்சிக்கும் போது, அவர்கள் உடல் மற்றும் மனதளவில் நிறைய மாற்றங்களை சந்திப்பார்கள். எனவே இந்த தருணத்தின் கணவன்மார்கள் தங்கள் மனைவிக்கு சற்று உறுதுணையாக இருந்து உதவி புரிந்தால், வேகமாக கருத்தரிக்கலாம். இக்கட்டுரையில் ஒரு பெண் கருத்தரிக்க முயற்றிக்கும் போது, ஆண் தவறாமல் செய்ய வேண்டியவைகள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

டிப்ஸ் #1 உடல் எடையைக் கவனிக்க வேண்டும். தற்போதைய மோசமான உணவுப் பழக்கத்தால் பலரும் உடல் பருமனால் அவஸ்தைப்படுகிறார்கள். உடல் பருமன் அதிகரித்தால், விந்தணுக்களின் எண்ணிக்கை குறைந்து, கருத்தரிப்பதில் பிரச்சனையை சந்திக்க நேரிடும். எனவே உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள ஆண்கள் முயல

டிப்ஸ் #2 புகைப்பிடிப்பதால் நுரையீரல் புற்றுநோய் வருவதோடு மட்டுமின்றி, கருவளமும் தான் பாதிக்கப்படும். ஆகவே தந்தையாக வேண்டுமென்ற ஆசை இருந்தால், புகைப்பிடிப்பதை உடனே நிறுத்துங்கள்

 

%e0%ae%ae%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%ae%e0%af%81%e0%ae%af%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae

டிப்ஸ் #3 கருத்தரிப்பதில் தாமதமானால், உடனே மருத்துவரை அணுகி, கருமுட்டை மற்றும் விந்தணுக்கள் ஆரோக்கியமாக உள்ளதா என சோதித்துக் கொள்ளுங்கள். இதனால் எந்த ஒரு தவறும் இல்லை.

டிப்ஸ் #4 கருத்தரிக்க நினைக்கும் தம்பதியர்கள் காப்ஃபைன் நிறைந்த காபி, டீ போன்றவற்றை முற்றிலும் தவிர்ப்பது மிகவும் நல்லது. ஏனெனில் காப்ஃபைன் கருவளத்தின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும். எனவே இவற்றை கருத்தரிக்கும் வரையிலாவது நிறுத்துங்கள்.

டிப்ஸ் #5 முக்கியமாக சந்தோஷமான வாழ்க்கையை வாழப் பழகுங்கள். தற்போதைய வேலைப்பளுமிக்க வாழ்க்கை முறையால், ஒவ்வொருவருமே மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறோம். மன அழுத்தம் கருவளத்தை மோசமாக பாதிக்கும். எனவே மன அழுத்தமில்லாத சந்தோஷமான வாழ்க்கையை வாழ ஆரம்பியுங்கள்.

Categories: Pregnancy Tips Tamil

Leave a Reply


Recent Recipes

Sponsors