‘லிப்ஸ்டிக்’கால் புற்றுநோய் ஆபத்து

‘லிப்ஸ்டிக்’ எனப்படும் உதட்டுச் சாயத்தால் தங்கள் இதழ் அழகை மெருகேற்றிக்கொள்ள பெண்கள் பலரும் விரும்புகின்றனர்.

ஆனால் அவர்களுக்கு ஓர் எச்சரிக்கைச் செய்தியை விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கின்றனர். தொடர்ந்து லிப்ஸ்டிக் பயன்படுத்துவதால், புற்றுநோய் ஏற்படலாம் என்பதே அது.

அமெரிக்கா கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவில் இத்தகவல் வெளியிடப்பட்டிருக்கிறது.

தற்போது தயாரிக்கப்படும் லிப்ஸ்டிக்குகளில் பயன்படுத்தப்படும் காரீயம்தான் பிரச்சினைக்குக் காரணம்.

பொதுவாக, குறைந்த அளவில் காரீயம் உள்ள பொருட்கள் உடல்நலத்துக்குத் தீங்கு விளைவிக்காது என்றாலும் அவற்றைத் தொடர்ந்து பயன்படுத்துவது தவறு என்கின்றனர் ஆய்வாளர்கள்.

lipstick-tamil-tips

ஆனால் லிப்ஸ்டிக் தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருட்களிலும், நிறத்துக்காக அதனுடன் சேர்க்கப்படும் பொருட்களிலும் அதிகளவு காரீயம் இருக்கிறது.

லிப்ஸ்டிக்கை பயன்படுத்தும்போது அதிலுள்ள காரீயம் தோலினால் உறிஞ்சப்பட்டு ரத்தத்தில் கலக்கிறது. அந்தக் காரீயம், உடலில் உள்ள ஈஸ்ட்ரோஜன் எனும் ஹார்மோன் சுரப்பை அதிகரிக்கிறது.

இந்த ஹார்மோன் பெண்களுக்கு அழகு, வசீகர தோற்றத்தை அளிப்பதுதான். ஆனால் இது அளவுக்கு அதிகமாகச் சுரக்கும்போது, புற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது.

மேலும், லிப்ஸ்டிக் உபயோகிக்கும்போது உதட்டின் நிறம் கருப்பாக மாறினாலோ அல்லது தோல் உரிந்தாலோ அந்த லிப்ஸ்டிக்கை பயன்படுத்தக் கூடாது.

பொதுவாக லிப்ஸ்டிக் உபயோகத்தைத் தவிர்ப்பதன் மூலம் சிறுநீரகம், கல்லீரல், நீரிழிவு, புற்றுநோய் போன்ற உடல்நலக் கோளாறுகள் ஏற்படுவதைத் தடுக்கலாம் என்பது ஆய்வாளர்கள் கருத்து.

Categories: Azhagu Kurippugal, Beauty Tips Tamil

Leave a Reply


Sponsors