5 நாட்கள் வரை பழங்களைக் கெட்டுப் போகாமல் வைத்துக் கொள்வது எப்படி ,veetu kurippugal

பழங்களை நீண்ட நாட்கள் நற்பதமாக வைத்துக் கொள்வது என்பது சற்று கடினமானது தான். குறிப்பாக வாழைப்பழத்தை 2 நாட்களுக்கு மேல் வீட்டில் வைத்திருந்தால், அது அழுக ஆரம்பித்துவிடும். ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு வாழைப்பழத்தைப் பராமரித்து வந்தால், வாழைப்பழங்கள் கெட்டுப் போகாமல் 5 நாட்களுக்கு மேல் நன்றாக இருக்கும். சரி, இப்போது அது எப்படி என்று காண்போம்.
ஸ்டெப் #1 முதலில் வாழைப்பழங்களைத் தனித்தனியாக பிரித்துக் கொள்ள வேண்டும்.

ஸ்டெப் #2 பின்பு பிளாஸ்டிக் கவரை எடுத்துக் கொள்ள வேண்டும்.

 

01-1485941404-3-wrap

ஸ்டெப் #3 வாழைப்பழங்களை படத்தில் காட்டியவாறு, மேல் பகுதியில் பிளாஸ்டிக் கவரைச் சுற்றிக் கொள்ளுங்கள். இதனால் வாழைப்பழங்கள் கெட்டுப் போகாமல் அப்படியே இருக்கும்.

வாழைப்பழம் விரைவில் பழுக்க… வாழைப்பழம் விரைவில் பழுக்க வேண்டுமானால், அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு மூடி வையுங்கள். இதனால் அதிலிருந்து எத்திலின் வாயு அதிகம் வெளியேறி, விரைவில் பழுக்கச் செய்யும்.

ஆப்பிள், அவகேடோ ஆப்பிள், அவகேடோ போன்ற பழங்களை நறுக்கிய பின், அதன் நிறம் மாறாமல் நற்பதமாக இருக்க, அதன் மேல் சிறிது எலுமிச்சை சாற்றினைத் தெளித்து, பின் பிளாஸ்டிக் கவரால் சுற்றிக் கொள்ளுங்கள்.

மேலும் சில… தக்காளி இல்லாமல் சமைப்பது என்பது முடியாத ஒன்று. ஆகவே பலரும் தக்காளியை அதிகளவில் வாங்கி வைத்துக் கொள்வோம். நம்மில் பலரும் தக்காளியை ஃப்ரிட்ஜில் வைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கின்றனர். ஆனால் அது தான் தவறு. தக்காளியை ஒரு அகன்ற பாத்திரத்தில் பேப்பர் விரித்து வைத்து, அதை காற்றோட்டமான மற்றும் ஈரப்பதமில்லாத இடத்தில் வைத்துப் பராமரித்தால், நீண்ட நாட்கள் நற்பதமாக இருக்கும்.

Loading...
Categories: Veettu Kurippugal TIps

Leave a Reply


Sponsors