தினமும் நீங்கள் அதிகம் சாப்பிட கூடாத 5 உணவுகள் ,Adhigam sappida koodatha unavugal

நமக்கு ஒரு கெட்டப்பழக்கம் இருக்கிறது, இன்று ஆரோக்கியம் அல்லது நல்லது என்று தெரிந்தால் உடனே ஆடை கிலோ கணக்கிலோ, அல்லது லிட்டர் கணக்கிலோ உடலில் ஏற்ற ஆரம்பித்து விடுவோம். இங்கு நாம் அமிர்தமே ஆனாலும், அதிகமானால் நஞ்சு என்பதை மறந்துவிடுகிறோம். அதே போல, நமது நாக்கை மேற்கத்திய உணவுகளின் சுவைக்கு அடிமை ஆக்கி வைத்திருப்பதும் நாம் செய்துக் கொண்டிருக்கும் ஒரு பெரிய தவறு. இவற்றால் தான் நமது ஆரோக்கியம் மிகவும் மோசமான நிலையை அடைகிறது

வெள்ளை அரிசி! நமது முன்னோர்கள் பண்டிகை நாட்களில் தான் அரிசி சாதம் சாப்பிட்டு வந்தனர். மற்றபடி தினமும் கூழ், கஞ்சி, கம்பு, நீராகாரம் என உடலுக்கு வலுமை சேர்க்கும் உணவுகள் மட்டுமே உண்டு வந்தனர். கவுரவ உணவு! பாலிஷ் செய்யப்பட்டு வெள்ளை அரிசி வந்தவுடனம் அது ஒரு வீட்டின் கவுரவ உணவாக மாற துவங்கியது. தினமும் வெள்ளை அரிசு சாப்பிட்டால் அவர்கள் பணக்காரர்கள் என்ற பிம்பம் வந்தது. ஆனால், பிம்பம் பரிசளித்தது என்னவோ ஆரோக்கிய குறைபாடுகள் மட்டும் தான்.

%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a

நீரிழிவு! ஆம், ஒருவேளை வெள்ளை அரிசி ருசிக்கும். அதுவே இரண்டு வேளை அல்லது அதற்கும் மேல் என்றால் ஆரோக்கியத்தை பார்த்து சிரிக்கும். இன்று உடல் பருமன் மற்றும் நீரிழிவு அதிகரிக்க அதிகப்படியான வெள்ளை அரிசி பயன்படும் வெள்ளை அரிசி காரணம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். நுண் ஊட்டச்சத்துக்கள் குறைபாடு! ஒரு கப் வெள்ளை அரிசி சாதத்தில் இரும்பு, பாஸ்பரஸ், பொட்டாசியம், தயாமின், ஃபோலேட் போன்றவை குறைவாகவே உள்ளன. நீங்கள் தினமும் வெள்ளை அரிசி சாதம், இட்லி, தோசை மட்டுமே சாப்பிட்டுக் கொண்டிருந்தால். உடலுக்கு அத்தியாவசிய நுண் ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமலேயே போய்விடுகிறது. எனவே, நாள் முழுதும் அதிகம் வெள்ளை அரிசி உணவில் சேர்ப்பதை தவிர்க்கவும்

 

. தாவர உணவே சிறந்தது! இந்திய தட்பவெப்ப நிலை என்பது சூடானது. இதனால் தான் இந்தியர்கள் இறைச்சி குறைவாகவும், தாவர உணவுகள் அதிகமாகவும் அன்று முதலே கடைபிடித்து சாப்பிட்டு வந்துள்ளனர். மேற்கத்திய மோகம்! ஆனால், உணவில் குடிகொண்ட மேற்கத்திய மோகம், கே.எப்.சி, மெக்டொனால்ட் போன்றவற்றின் வருகை அதிகமாக அசைவம் உண்ணும் பழக்கம் அதிகரித்தது. உங்களுக்கு தெரியுமா? நீங்கள் அதிகமாக இறைச்சி உண்பதால் நூற்றுக்கும் மேற்பட்ட நோய்கள் உங்கள் உடலை தாக்குகின்றன. பேராபத்து! அதிலும், மால்களில் விற்கப்படும் பதப்படுத்தி விற்கப்படும் இறைச்சி உணவுகள் மிகவும் பேராபத்தை உண்டாக்க கூடியவை. நாள்ப்பட இவை இதய நோய், இரத்த அழுத்தம் போன்றவை உண்டாக முக்கிய காரணியாக திகழ்கிறது. யாருக்கு உகந்தது? பொதுவாகவே

 

இறைச்சி உணவுகளை செரிக்க உடல் இரட்டிப்பு மடங்கு செயல்பட வேண்டும். அதனால் தான் அதிக உடற்பயிற்சி அல்லது விளையாட்டு வீரர்கள் மட்டுமே அதிக இறைச்சி உண்பது உடல் வலிமை அதிகரிக்க உதவும் எனப்படுகிறது. செரிமானம்! மேலும், செரிக்காத இறைச்சி உணவுகள் உடலுக்குள் நச்சுக்களாக மாறி நோய் எதிர்ப்பு மண்டலத்தில் தாக்கத்தை உண்டாக்கி, நோய் எதிர்ப்பு சக்தியில் பாதிப்பு ஏற்படுத்துகிறது. அல்லது நீங்கள் அசைவ உணவு சாப்பிடும் போது, செரிமானம் சிறக்க, நார்ச்சத்து உணவுகளையும் சாம் அளவில் எடுத்துக் கொள்வது சிறந்தது.

 

டீ, காபி! பலரும் டீ, காபி குடிப்பது மூளையை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள உதவுகிறது என தப்புக்கணக்கு போடுகிறார்கள். ஆனால், நீங்கள் அதிகமாக குடிக்கும் ஒவ்வொரு கப் காபியும், டீயும், இதயத்துடிப்பு மற்றும், இரத்த அழுத்தத்தை அதிகரிக்க செய்கிறது என்பது தான் அழுத்தமான உண்மை.

 

ஹார்மோன் பாதிப்பு! அதிகப்படியான காபி மற்றும் டீ, அட்ரினல் மற்றும் கார்டிசோல் எனப்படும் ஹார்மோன் உற்பத்தியை தூண்டுகிறது. இதனால் சோர்வு, மன அழுத்தம், பதட்டம், கவனமின்மை குறைபாடு போன்றவை அதிகரிக்கும். எலும்பு நோய்! மேலும், அதிகமான காஃபின் உடலில் கலக்கும் போது அது கால்சியத்தை அழித்து, எலும்புகளின் ஆரோக்கியத்தை சிதைக்க செய்கிறது மற்றும் ஆஸ்டியோபொரோசிஸ் எனும் எலும்பு நோய் உண்டாகவும் காரணியாக திகழ்கிறது. இரவு அறவே வேண்டாம்! அதே போல, அதிகமான பால் உணவுகள் உட்கொள்ளும் போது உடலில் சளி, இருமல், சுவாச கோளாறுகள் உண்டாக வாய்ப்புகள் உண்டு. முக்கியமாக இரவு நேரத்தில் அதிக காபி, டீயை தவிர்ப்பது சிறந்தது.

 

 

வெள்ளை சர்க்கரை! இருப்பதிலேயே மிகவும் மோசமானது வெள்ளை சர்க்கரை. உங்களுக்கு தெரியுமா? நீரிழிவு நோயாளிகள் கூட கரும்பு சர்க்கரை சாப்பிடலாம். எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது. ஆனால், வெள்ளை சர்க்கரை ஆளையே கொன்று விடும். இதை அறிந்தும் வெள்ளை என்ற ஒரே காரணத்தால் நாம் அதை தினமும் உபயோகப்படுத்தி வருகிறோம். சளி, காய்ச்சல் போல…. இன்று நீரிழிவு நோய் சளி, காய்ச்சல் போல எல்லா வீடுகளிலும் காணப்படுவதற்கும்,

 

உடல் பருமன் ஏகபோகமாக அதிகரித்து இருப்பதற்கும் முக்கிய காரணமே இந்த வெள்ளை சர்க்கரை தான். பல் பிரச்சனைகள்! உடல் பருமன் மட்டுமின்றி, பல் வலி, பல், சொத்தை, இதய நோய்கள், இரத்த அழுத்தம் போன்றவை உண்டாக இந்த வெள்ளை சர்க்கரை முதன்மை காரணமாக திகழ்கிறது.

 

காபி, டீயில் இருந்து, இனிப்பு உணவுகள் முதல் எல்லாவற்றிலும் நாம் இதை சேர்ப்பதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். இளைஞர்கள்! இன்று இளம் வயதிலேயே இளைஞர்கள் அதிக உடல் எடையுடன் காணப்படுவதற்கு முக்கிய காரணி இந்த நொறுக்குதீனி பழக்கம் தான். இடைவேளைகளில் நீங்கள் எந்த உணவு நொறுக்கி உண்கிறீர்கள் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்

 

. பயிர், காய்கறிகள்! வேக வைத்த பயிர், காய்கறிகள், நறுக்கிய பழங்கள் போன்றவை ஆரோக்கிய இடைவேளை உணவுகள். இது உடல் ஆரோக்கியம் அதிகரிக்க, சோர்வு அடையாமல் இருக்க, மேலும், உடலில் ஊட்ச்சத்து குறைபாடு ஏற்படாமல் இருக்க உதவும். இதய கோளாறுகள்! ஆனால், நீங்கள் தேர்வு செய்யும் நொறுக்கு தீனிகள், தீய கொலஸ்ட்ரால் அதிகரிக்க,

 

இதய கோளாறுகள் உண்டாக, உடல் பருமன் அதிகரிக்க, இரத்த ஓட்டம் சீர்கேடு அடைய என பல ஆரோக்கிய பிரச்சனைகள் உண்டாக தான் காரணியாக இருக்கின்றன. கரையான்கள்! முக்கியமாக பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் நொறுக்கு தீனிகளில் இருக்கும் இரசாயன கலப்புகளும், எண்ணெயில் வறுத்த உணவுகள் உங்கள் ஆரோக்கியத்தை அழிக்கும் கரையான்கள் என்பதை மறந்து விட வேண்டாம். இதை தினமும் அதிகமாக உட்கொள்ளவும் வேண்டாம்.

Categories: Maruthuva Kurippugal in Tamil

Leave a Reply


Sponsors