அப்பளம் பொரித்த குழம்பு கிராமத்து சமையல்,appalam poricha kulambu gramathu samayal

தேவையானவை: பாசிப்பயறு – 50 கிராம், முருங்கைக்காய் – ஒன்று, கத்திரிக்காய் – 3, மிளகாய்த்தூள் – 3 டீஸ்பூன், பெரிய வெங்காயம், தக்காளி – தலா ஒன்று, அப்பளம் – 10, சிறிது தேங்காய், சோம்பு சேர்த்து அரைத்த விழுது – 2 டீஸ்பூன், கடுகு – சிறிதளவு, எண்ணெய் – பொரிக்க, உப்பு – தேவையான அளவு.

%e0%ae%85%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81

செய்முறை: அப்பளத்தைப் பொரிக்கவும். முருங்கைக்காய், கத்திரிக்காயை நறுக்கவும். பாசிப்பயறுடன் வெங்காயம், தக்காளி சேர்த்து வேகவைக்கவும்.

இன்னொரு பாத்திரத்தில் நறுக்கிய முருங் கைக்காய், கத்திரிக்காய், தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும். மிளகாய்த்தூள், தேங்காய் – சோம்பு விழுது, உப்பு சேர்க்கவும்.

இதோடு, வேகவைத்த பயறுக்கலவையைச் சேர்த்து, கடுகு, தாளித்துக் கொட்டி, பொரித்த அப்பளத்தை உடைத்து அதில் சேர்த்து மூடவும். சாதத்துடன் சூடாகப் பரிமாறவும்.

Loading...
Categories: Gramathu Samayal Kurippu, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors