ஆப்பிள் சீடர் வினிகரின் நன்மைகள்!! ,apple cider vinegar benefits in tamil

ஆப்பிள் பழத்தில் ஊட்டச்சத்துகள் அதிகம் நிறைந்துள்ளன எனவும், மருத்துவ பயன்பாடுகள் அதிகம் எனவும் அனைவரும் அறிவோம். ஆனால் புளித்துப் போன ஆப்பிள் பழத்தை கூட மருத்துவ பயன்பாடுகளுக்கு உபயோகிக்கலாம் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆம் அது உண்மை தான். ஆப்பிள் சீடர் வினிகர் என்பது ஆப்பிள் பழச் சாற்றில் இருந்து செய்யப்படும் ஒரு வகை வினிகராகும். தமிழில் இதனை அரத்திக்காடி அல்லது அரத்தி நொதிக் காடி என அழைப்பர். இவ்வகை வினிகர் புளித்து போன ஆப்பிள் பழங்களில் இருந்து செய்யப்படுகிறது. ஆப்பிள் சீடர் வினிகரால் புரையழற்சி, காய்ச்சல் மற்றும் நோய் தொற்றுகள் குணமாவதால், இவ்வகை வினிகரை பல ஆண்டுகளாய் மக்கள் உபயோகித்து வருகின்றனர். ஆப்பிள் சீடர் வினிகரை தினமும் அருந்தி வந்தால், செரிமானம் மேம்படும் மற்றும் மன அழுத்தம், சோர்வு, மூட்டு வலி போன்ற நாள்பட்ட நோய்கள் கூட குணமடையும். இவை மட்டுமல்லாமல், இரத்த அழுத்தம் மற்றும் தேவை இல்லாத கொழுப்பின் அளவை குறைக்கும்.

apple cider vinegar udal edai kuraiya

ப்பிள் சீடர் வினிகர் பல ஆண்டுகளாக பல்வேறு நோய்களை குணப்படுத்த உதவுகிறது. நவீன மருத்துவத்தின் தந்தையான ஹிப்போகிரேட்ஸ் (Hippocrates) கி.மு.400 ஆம் ஆண்டு சளி மற்றும் காய்ச்சலுக்கு ஆப்பிள் சீடர் வினிகரை தேனுடன் கலந்து சிகிச்சை செய்யலாம் என்று பரிந்துரைத்துள்ளார். அதிலிருந்து ஆப்பிள் சீடர் வினிகர் பல்வேறு நோய்களை போக்கவும், வலி நிவாரணியாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல், ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள புளிப்புச் சுவை, உடலை சுத்தப்படுத்தும் பண்புகள் நிறைந்தது.%e0%ae%86%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%af%80%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d

மேலும் கிருமி நாசினியாகவும் பயன்படுத்தக்கூடியது. ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள அசிட்டிக் அமிலம் இரைப்பைக் குடலில் கேடு விளைவிக்கும் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளை போக்க வல்லது. மேலும் இது குடலில் உணவு செரிமானத்திற்கும், ஊட்டச்சத்து உறிஞ்சுதலுக்கும் உதவுகிறது. ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள பெக்டின் (Pectin) என்ற நீரில் கரையக்கூடிய நார்ச்சத்து, உடலில் இருந்து நீர், நச்சுக் கொழுப்பு ஆகியவைகளை பிரித்தெடுத்து உடலை விட்டு அப்புறப்படுத்துகிறது. இப்போது அந்த ஆப்பிள் சீடர் வினிகர், உடலுக்கு வேறு எந்த நன்மைகளை எல்லாம் கொடுக்கும் என்று பார்ப்போம்.

how to use apple cider vinegar for hair in tamil

குளுக்கோஸ் அளவைக் குறைத்தல் ஆப்பிள் சீடர் வினிகர்யில் உள்ள அசிடிக் அமிலம், ஸ்டார்ச் செரிமானத்தை மெதுவாக நடைபெறச் செய்து, இரத்த ஓட்டத்தில் இருக்கும் குளுக்கோஸ் அளவை குறைக்கிறது. கெட்ட கொழுப்பை குறைத்தல் ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள பெக்டின் (Pectin), உடலில் இருந்து கெட்ட கொழுப்பை நீக்குகிறது. ஆயினும் சிலருக்கு பெக்டின் பொருளானது ஒவ்வாமையை உண்டாக்கும். அத்தகையவர்கள் ஆப்பிள் சீடர் வினிகரை உபயோகித்தல் கூடாது. வலிமையான எலும்புகள் பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் இன்னும் பல கனிமங்கள் ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ளன.

apple cider vinegar benefits in tamil language

இதில் உள்ள பொட்டாசியம், உடலின் நீர்ச்சத்தை கட்டுப்படுத்தி ஆரோக்கியமான இதயத்துடிப்பிற்கு வழி வகுக்கிறது. மக்னீசியம், நொதி (fermentation) செயல்பாட்டுக்கு தூண்டுதலாக இருந்து, செரிமானத்திற்கு உதவுவது மட்டுமல்லாமல் கால்சியத்தை உயர்த்தி எலும்புகளை வலுவாக்குகிறது. நோயெதிர்ப்பு சக்தியை வலுவாக்கும் மயோ கிளினிக்கின் படி, ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள பீட்டா-கரோட்டின் (Beta Carotine) என்னும் ஆக்சிஜெனேற்றத் தடுப்பான் பண்புகள் இருப்பதால், அவை நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குகிறது. கீல்வாதத்தை குணப்படுத்துவதற்கு… கீல்வாதமானது, உடலில் அமிலப் படிகங்கள் இருப்பதால் உருவாகிறது. இத்தகைய அமில படிகங்களை ஆப்பிள் சீடர் வினிகர், உடலின் கார சமநிலையை கட்டுப்படுத்தி, அவற்றை உடைத்தெறிகிறது. இருப்பினும் இந்த கூற்றுக்கு அறிவியல் சான்றுகள் ஏதுமில்லை.
apple vinegar uses for skin tamil

ஆயினும் மருத்துவர் ஜார்விஸ் ஆப்பிள் சீடர் வினிகர் மூலம், அவரது நோயாளிகளுக்கு கீல்வாத நோய்க்கு சிகிச்சை அளித்து, நோய் குணம் அடைந்ததாக கூறுகிறார். பொடுகைப் போக்கும் தலையில் பொடுகை உண்டாக்கும் பூஞ்சையை, ஆப்பிள் சீடர் வினிகர்யில் உள்ள பூசண எதிர்க்கும் தன்மையானது முற்றிலும் நீக்கும். எனவே அதற்கு 50 சதவீதம் தண்ணீர் மற்றும் 50 சதவீதம் ஆப்பிள் சீடர் வினிகர் கலந்து, அக்கலவையை தலையில் படுமாறு தேய்த்து, பொடுகு போகும் வரை உலர விடவும். சரும நோய் ஆப்பிள் சீடர் வினிகர்யில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சி பண்புகள், சூரியக்கதிர்களால் ஏற்படும் சரும நோய்களுக்கு நிவாரணம் அளிக்கிறது. அதுமட்டுமல்லாமல், ஆப்பிள் சீடர் வினிகர் இரைப்பை குடலில் உள்ள அழற்சியையும் சரிசெய்கிறது. எடை இழப்பு இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதால்,

ஆப்பிள் சீடர் வினிகர் உடலில் எடை இழப்பிற்கு உதவுகிறது. ஏனெனில் இன்சுலின் உடலில் சர்க்கரையை கொழுப்பாக்கி சேமித்து வைக்காது. மென்மையான சருமம் ஆப்பிள் சீடர் வினிகர், கழுத்து மற்றும் முகம் பகுதிகளில் உள்ள சருமத்தை மென்மையாக வைத்துக் கொள்ள உதவுகிறது. முக்கியமாக இவற்றை கண்களில் படாமல் பார்த்து கொள்ள வேண்டும். இல்லையெனில் அவை கண்களில் எரிச்சலை உண்டாக்கும். ஈஸ்ட் தொற்றை சரிசெய்தல் தினமும் 2 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை பெண்கள் உட்கொள்வதன் மூலம், ஈஸ்ட் நோய்த்தொற்று அபாயமானது குறையும். ஆயினும் அனைத்து பெண்களுக்கும் சாதகமான பலன் கிடைப்பதில்லை.

எனவே எச்சரிக்கையாக செய்ய வேண்டும். ஆப்பிள் சீடர் வினிகரின் மருந்தளவுகள் * ஆப்பிள் சீடர் வினிகர்யை ஒவ்வொரு நாளும் எடுத்துக் கொள்ளலாம். இரண்டு முதல் நான்கு டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் எடுத்துக் கொள்வதால், உடலில் ஆரோக்கியம் மற்றும் வலிமை மேம்படும். அதிலும் காலையில் முதல் வேலையாக, ஆப்பிள் சீடர் வினிகரை உண்டு வந்தால், அது நல்ல சுத்திகரிப்பானாக செயலாற்றும். * உடல் எடையை குறைக்க நினைப்போர், ஒரு டம்ளர் நீரில் 3 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை கலந்து, மூன்று வேளை அருந்தவும். பொதுவாக ஒரு டம்ளர் நீரில், எலுமிச்சை சாறு, தேன் மற்றும் 1 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை கலந்து அருந்துவதே, ஆப்பிள் சீடர் வினிகரை அருந்துவதற்கு பொதுவான வழியாகும்

Loading...
Categories: Maruthuva Kurippugal in Tamil

Leave a Reply


Sponsors