ஆப்பிள் சூப்,apple soup Seivathu eppide Samayal Kurippu

தேவையான பொருட்கள் :

ஆப்பிள் – 2,
எலுமிச்சை சாறு – ஒரு டேபிள்ஸ்பூன்,
வெண்ணெய், மிளகுத்தூள் – தலா ஒரு டீஸ்பூன்,
பால் – ஒரு டம்ளர்.

%e0%ae%86%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%af%82%e0%ae%aa%e0%af%8dapple-soup-seivathu-eppide-samayal-kurippu

செய்முறை :

* ஆப்பிளை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* வெண்ணெயை உருக்கி, பொடியாக நறுக்கிய ஆப்பிள் சேர்த்து லேசாக வதக்கி, 2 டம்ளர் நீர் சேர்த்து வேகவிடவும்.

* ஆப்பிள் நன்றாக வெந்ததும் அதை கரண்டியால் சற்று மசித்து விடவும். மிளகுத்தூள், பால் சேர்த்துக் கலக்கவும்.

* பரிமாறும் முன் விருப்பப்பட்டால், எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கொள்ளலாம்.

* சத்தான ஆப்பிள் சூப் ரெடி.

பலன்கள்: ஆப்பிள் சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு சூப்பாக செய்து கொடுக்கலாம். இதில், வைட்டமின்கள், புரதச்சத்துக்கள் அதிகம் உள்ளன. எந்த நோயும் உடலைத் தாக்காமல் காப்பதுடன், உடலை வலுவாக்கும். சருமம் பொலிவாகும். உடல் எடையைக் குறைக்கவும், உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.

Categories: arokiya unavu in tamil, Soup Recipe In Tamil, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors