முட்டையின் ஓட்டை வைத்து சருமத்தைப் பாதுகாக்க முடியுமா, saruma azhagu kurippugal,azhagu kurippu for face in tamil

முட்டை சாப்பிட்டால் உடலுக்கு நல்லது என்று அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். தினமும் ஒரு முட்டையை உணவில் சேர்த்துக் கொண்டால் நமது உடலுக்குத் தேவையான புரதம் கிடைக்கும். உடலும் ஆரோக்கியமாக இருக்கும். முட்டை மட்டுமல்ல அதன் ஓடு கூட நமக்கு நன்மை பயக்கும். முட்டையின் ஓடு நமது சருமத்திற்கு நல்ல பொலிவை கொடுக்கும். முட்டையில் இயற்கையாகவே சில அமிலத் தன்மையும் மற்ற சத்துக்களும் சருமத்தை இயற்கையாக முறையில் அழகைக் கூட்டி ஜொலிக்கச் செய்யும். இனிமேல் நீங்கள் முட்டை சாப்பிட்டால் அதன் ஓட்டை தூக்கி போடுவதற்கு முன் சற்று சிந்தித்துப் பாருங்கள். தூக்கிப் போடுவதற்கு பதிலாக அதனை நல்ல முறையில் உபயோகிக்கலாம் அல்லவா.

சருமத்துளைகளை சுத்தம் செய்கிறது முட்டையின் ஓடு சருமத்தில் உள்ள துளைகளைச் சுத்தம் செய்து ஆரோக்கியமான மற்றும் மிருதுவான சருமத்தினை பெற உதவுகிறது. முட்டையின் ஓடினை பொடி செய்து கொள்ளவும். அந்தப் பொடியுடன் எலுமிச்சைச் சாறு மற்றும் தேன் கலந்து ஒரு கெட்டியான பேஸ்ட் ஆக செய்து கொள்ளுங்கள்.
%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%93%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%b5%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81

இந்த பேஸ்டை முகத்திற்கு தடவி பின்னர் கழவி விட வேண்டும். இவ்வாறு செய்தால் முகம் பளிச்சென்று இருக்கும். பொலிவான சருமம் தரும் முட்டையின் ஓட்டில் இயற்கையாகவே புரதச் சத்துக்களும் மற்றும் வைட்டமின்களும் உள்ளதால் நமக்கு இளமையான மற்றும் பொலிவான சருமத்தையும் தரும். 2 டீஸ்பூன் முட்டை ஓடு பொடியுடன் தேன் மற்றும் கடலை மாவு சேர்ந்துக் கலந்துக் கொள்ள வேண்டும். இந்தக் கலவையை முகத்தில் தடவி 15 நிமிடம் வைத்திருக்க வேண்டும். வாரத்திற்கு 2 அல்லது 3 முறை இதனை செய்யலாம்.

இளமை தோற்றத்தைத் தரும் வயதாவதினால் ஏற்படும் முகச் சுருக்கத்தை இது போக்கிவிடும். 3 முதல் 4 ஸ்பூன் முட்டை ஓடு பொடியுடன் தயிர் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து கழவி விடலாம். முகத்தில் விழும் கோடு போன்றவற்றை தடுப்பதற்கு இது சிறந்த வழியாகும். கண்களுக்கு கீழ் ஏற்படும் வறட்சியைத் தடுக்கும் 2 முதல் 4 ஸ்பூன் முட்டை ஓடு பொடியுடன் தேன் சேர்த்து கலந்து அதை கண்களைச் சுற்றி உள்ள சருமப் பகுதியில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். இதனை தினமும் இரவு தூங்கும் முன்பு மறக்காமல் செய்து வாருங்கள். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் கண்களின் கீழ் பகுதி வறட்சி அடையாமல் நீண்ட நேரம் இருக்கும். சரும எரிச்சலை சரி செய்யும் வெயிலினால் ஏற்படக் கூடிய சரும எரிச்சல் போன்றவற்றை முட்டையின் ஓடு பய்ன்படுத்துவதால் சரி செய்து விடலாம்

. ஒரு கப் ஆப்பிள் சிடர் வினிகருடன் சிறிது முட்டை ஓடு பொடி சேர்த்து கலந்து 10 நிமிடம் ஓற விட வேண்டும். பின்னர் அந்தக் கலவையை சருமத்தில் தடவி வந்தால் எரிச்சல் போன்றப் பிரச்சனைகள் சரியாகி விடும். மிருதுவான சருமத்தை தரும் கற்றாழை ஜெல்லுடன் முட்டை ஓடு பொடியை சேர்த்து கலந்து முகத்தில் தடவி ஓற வைத்து பின்னர் குளிர்ந்த நீரினால் கழுவி விட வேண்டும். இவ்வாறு தினமும் 2 முறை செய்து வந்தால் மிருதுவான மற்றும் பளபளப்பான சருமம் கிடைக்கும்.

சருமத்தை ஆழமாக சுத்தம் செய்யும் சருமத்தை ஆழமாக சுத்தம் செய்ய வேண்டும் என்றால் முட்டையின் ஓட்டை பயன்படுத்த வேண்டும். முட்டையின் ஓட்டை ஒரு மாஸ்காக முகத்திற்குப் போடுவதால் முகத்தில் சேர்ந்திருக்கும் அழுக்குகளை நீக்கி முகப்பரு ஏற்படாமல் தடுத்து முகத்தை அழகுப் படுத்தும். முகத்தைப் பிரகாசமாக மாற்றும் இயற்கையான முறையில் முகத்தை பிரகாசமாக்க வேண்டும் என்றால் முட்டையின் ஓட்டை சருமத்திற்கு பயன்படுத்த வேண்டும்.

முட்டை ஓடு பொடியுடன் சிறிது எலுமிச்சைச் சாறு மற்றும் சாம்பலை சேர்த்து கலக்கிக் கொள்ள வேண்டும். இந்தக் கலவையை முகத்தில் போட்டு 30 நிமிடம் ஓற வைத்து குளிர்ந்த நீரினால் கழுவி விட வேண்டும்.

Categories: Azhagu Kurippugal, Beauty Tips Tamil

Leave a Reply


Sponsors