புற்றுநோய்க்கான முக்கிய அறிகுறிகள்,Cancer Tips in Tamil

புற்றுநோய் எப்போது ஒருவரைத் தாக்கும் என்று சொல்ல முடியாது. நாம் இதுவரை நுரையீரல், மார்பகம், புரோஸ்டேட் போன்ற புற்றுநோய்களின் அறிகுறிகளைப் பார்த்துள்ளோம். இப்போது இக்கட்டுரையில் வயிற்று புற்றுநோயின் அறிகுறிகளைப் பற்றி காணப் போகிறோம். முடி உதிர்வை தடுக்கனுமா? அருமையான 4 பாட்டி வைத்தியம்!! புதைகுழியில் சிக்கினால் அதிலிருந்து எப்படி தப்பிப்பது? எச்சரிக்கை! இந்த வகையான உணவுகள் உடலினுள் தீங்கு விளைவிக்கும் புழுக்களை அதிகரிக்குமாம்!

 

 

புற்றுநோய்களிலேயே வயிற்றுப் புற்றுநோய் மிகவும் வலிமிக்கதாக இருக்கும். ஆனால் வயிற்று புற்றுநோய்க்கு வயிற்று வலி மட்டுமே அறிகுறி அல்ல. அதையும் தாண்டி, நாம் சாதாரணமாக நினைக்கும் சில பிரச்சனைகளும் அறிகுறிகளாகும். சரி, இப்போது வயிற்று புற்றுநோய் இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள் என்னவென்று பார்ப்போம். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் மலம் அல்லது வாந்தியில் இரத்தம் ஒருவர் மலம் கழிக்கும் போது, இரத்தம் கலந்து வந்தாலோ அல்லது இரத்த வாந்தி எடுத்தாலோ, சற்றும் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும். பசியின்மை பசியின்மையும் வயிற்று புற்றுநோயின் அறிகுறிகளுள் ஒன்றாகும். அதிலும் அதிகம் எதுவும் சாப்பிடாமலேயே வயிறு நிறைந்துவிட்டால், அதை சாதாரணமாக நினைத்துவிடாமல் மருத்துவரை உடனே அணுகுங்கள். வயிற்று வலி வயிற்று வலியும் வயிற்று புற்றுநோய்க்கான அறிகுறிகளுள் ஒன்று. எனவே அடிக்கடி கடுமையான வயிற்று வலியால் அவஸ்தைப்பட்டால், அது வயிற்று புற்றுநோயினால் கூட இருக்கலாம்

%e0%ae%aa%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%a8%e0%af%8b%e0%ae%af%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af

 

. திடீர் எடை குறைவு எந்த ஒரு டயட்டிலும் இல்லாமல், உடல் எடை குறைந்தால், அதை சாதாரணமாக விடாதீர்கள். திடீர் உடல் எடை குறைவு, வயிற்று புற்றுநோயின் ஓர் அறிகுறிகளுள் ஒன்றாகும். நெஞ்செரிச்சல் அடிக்கடி நெஞ்செரிச்சல், அஜீரண கோளாறு போன்றவை ஏற்பட்டால், அது வயிற்று புற்றுநோயின் அறிகுறிகளுள் ஒன்றாகும். எனவே கவனமாக இருங்கள். வயிற்று உப்புசம், வயிற்றுப் போக்கு மற்றும் மலச்சிக்கல் வயிற்றில் புற்றுநோய் செல்கள் வளர்வதாக இருந்தால், வயிறு உப்புசமாகவும், குடலியக்கத்தில் இடையூறு ஏற்பட்டு மலச்சிக்கல் அல்லது வயிற்றுப் போக்கு போன்றவற்றை சந்திக்கக்கூடும். இம்மாதிரியான சூழ்நிலையில் உடனே மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.

Loading...
Categories: Maruthuva Kurippugal in Tamil

Leave a Reply


Sponsors