கருவாட்டு மசாலா குழம்பு,dry fish curry recipe in tamil font

கருவாட்டு மசாலா (dry fish gravy)

தேவையான பொருட்கள்:

கருவாடு-8 துண்டுகள்.

சின்ன வெங்காயம்-150 கிராம்.

தக்காளி-100கிராம்.

பூண்டு-15 பல்.

புளி-1 எலுமிச்சை அளவு.

தாளிக்க :

எண்ணெய் -தேவையான அளவு.

கடுகு.

உளுந்து.

வெந்தயம்.

வர மிளகாய்-3.

கறிவேப்பிலை.

பொடி வகைகள் :

மிளகாய் பொடி -2 தேக்கரண்டி.

சாம்பார் பொடி -1 தேக்கரண்டி.

உப்பு-தேவையான அளவு.

செய்முறை :

1.கருவாட்டை சுடு தண்ணீரில் கழுவி எண்ணெய்யில் போட்டு பொறித்துக் கொள்ளவும்.

2.பின் தாளிக்க கொடுத்துள்ளவைகளை கடையில் எண்ணெய் ஊற்றி தாளித்து வெங்காயம், பூண்டு,தக்காளி,போட்டு நன்றாக வதக்கி புளியை அதில் கரைத்து ஊற்றி பொடி வகைகளையும் போட்டு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

3.பின் கருவாட்டையும் போட்டு கொதிக்க விட்டு தேவையான அளவு உப்பு போட்டு கொதிக்க விட்டு பச்சை வாசம் போய் கிரேவி பதம் வந்தவுடன் இறக்கவும்.

குறிப்பு:

கருவாட்டிலும் உப்பு இருப்பதால் உப்பு பார்த்து போடவும்.

இட்லி,தோசை மற்றும் சாதத்திற்கும் இது மிகவும் ஏற்றதாக இருக்கும்.

Loading...
Categories: Kuzhambu Recipes Tamil, Tamil Cooking Tips, அசைவம்

Leave a Reply


Sponsors