முட்டை சால்னா,Muttai Salna Seivathu Eppadi ,Egg Salna Recipe cooking tips in tamil

வெங்காயம் – 1
தக்காளி – 1
முட்டை – 3
பச்சை மிளகாய் – 2
உப்பு – தேவைக்கு
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி

அரைக்க…

நறுக்கிய வெங்காயம் – 1
தக்காளி – 1
தேங்காய் – 1/2 கப்
பெருஞ்சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்
மிளகு – 1 தேக்கரண்டி
பட்டை – 1 அங்குல குச்சி
கறிவேப்பிலை – சிறிது
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
மல்லி தூள் – 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்

%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bemuttai-salna-seivathu-eppadi-egg-salna-recipe-cooking-tips-in-tamil

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பட்டை, பெருஞ்சீரகம், மிளகு சேர்த்து, பின் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பில்லை, தக்காளி, மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள், துருவிய தேங்காய் சேர்த்து நன்றாக கிளறி ஆறவிடவும். ஜாரில் வதக்கிய பொருட்களை எடுத்து நைசாக மசித்து வைக்கவும். ஒரு கடாயில் வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாய் எடுத்து தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள் சேர்க்கவும். அதில் சிறிது உப்பு சேர்த்து மூடி வேக விடவும்.

பின் அரைத்து வைத்துள்ள மசாலா கலவையை ஊற்றி, அடுப்பை சிம்மில் வைத்து எண்ணெய் பிரியும் வரை வேக விடவும். ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி எக் பீட்டர் கொண்டு அடித்து வைக்கவும். சால்னாவில் எண்ணெய் பிரிந்து வரும்போது முட்டை கலவையை ஊற்றி நன்றாக கலந்து 1 நிமிடம் வேக விடவும். முட்டை சால்னா ரெடி

Categories: Kuzhambu Recipes Tamil, Non Vegetarian Recipes Tamil, Tamil Cooking Tips, அசைவம்

Leave a Reply


Sponsors