முகம் பளிச்சென்று மாற வீட்டிலேயே பிளீச் செய்யலாம்,face bleaching tips at home in Tamil

பிளீச்சிங் செய்வதன் மூலம் உடனடியாக நல்ல நிறத்தைப் பெற முடியும். ஏனெனில் சருமம் பொலிவிழந்து கருமையாக காணப்படுவதற்கு காரணம் சருமத்தில் தங்கியுள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள்தான். ஆனால் அத்தகைய அழுக்குகளையும், இறந்த செல்களையும் ப்ளீச்சிங் செய்வதால் உடனே போக்கலாம். பொதுவாக இத்தகைய ப்ளீச்சிங்கை அதிக செலவு இன்றி வீட்டிலேயே செய்யலாம். சருமத்திற்கும் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் பார்த்துக்கொள்ளலாம்.

* ப்ளீச்சிங் செய்யும்போது முகக்கலவை புருவத்திலோ அல்லது தலை முடியிலோ படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

 

%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1-%e0%ae%b5%e0%af%80
* ப்ளீச்சிங் செய்யும் முன் முகத்தை க்ளன்சிங் செய்ய வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்குகிறது. அதுமட்டுமின்றி க்ளன்சிங் செய்வதால் முகத்தில் மேக்அப் போட்டிருந்தால் அதுவும் நீங்கிவிடும். எனவே பால் அல்லது க்ளன்சரைக் கொண்டு பஞ்சு மூலம் முகத்தை துடைத்து எடுக்க வேண்டும்.
* முகத்திற்கான ப்ளீச் கிரீம் மற்றும் கால் ஸ்பூன் ஆக்டிவேட்டர் பவுடரை போட்டுக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் ப்ளீச் கிரீமுடன் ஆக்டிவேட்டர் பவுடர் கலந்து உள்ள பேக்குகளை பயன்படுத்தலாம்.
* பின் அதனை நன்கு கட்டி இல்லாதவாறு கலந்து கொள்ள வேண்டும். பின்பு அதனை முகம் மற்றும் கழுத்தில் தடவ வேண்டும். புருவம் மற்றும் தலைமுடியில் படாதவாறு முழுவதும் அப்ளை செய்ய வேண்டும்.
* பின்னர் ரோஸ் வாட்டரில் காட்டன் துண்டுகளில் எடுத்து கண்களின் மேல் வைத்து 15 நிமிடம் ஊறவைக்க வேண்டும்.
* பின்னர் மெல்லிய துணி கொண்டு துடைத்து எடுக்க வேண்டும்.
* அடுத்து ஆரஞ்சு அல்லது எலுமிச்சை பழங்கள் அல்லது ஆப்பிள் பழத்தை குழைத்து பேஸ் பேக் போட்டு 10 நிமிடம் ஊறவைத்து மெல்லிய காட்டன் துணியில் துடைத்து எடுக்க வேண்டும்.
* இதை வாரம் ஒரு முறை அல்லது இரண்டு வாரத்துக்கு ஒரு முறை செய்து வந்தால் சருமத்தில் உள்ளநச்சுகள் நீங்கி சருமம் நல்ல நிறத்துடன் காணப்படும்.

Categories: Azhagu Kurippugal, Beauty Tips Tamil

Leave a Reply


Recent Recipes

Sponsors