ஃபிங்கர் சிக்கன்,finger chicken Cooking Tips In Tamil,chettinad unavu vagaigal

தேவையான பொருட்கள்:

சிக்கன் (1 இஞ்ச் நீளமான எலும்பில்லாத கறி) – 1/2 கிலோ

முட்டை – 1

தயிர்  – 1 கப்

இஞ்சிபூண்டு விழுது – 2 டீஸ்பூன்

மைதா – 1 கப்

பிரட் தூள் – 1 கப்

உப்பு – 1 டீஸ்பூன்

மிளகுத்தூள் – 1 டீஸ்பூன்

மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

பேக்கிங் பௌடர் – 1 டீஸ்பூன்

கேசரி கலர் – சிறிதளவு

எண்ணெய் – தேவையான அளவு

%e0%ae%83%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8dfinger-chicken-cooking-tips-in-tamilchettinad-unavu-vagaigal

1. முதலில் ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ளவும். பின் அதில் தயிர் , இஞ்சிபூண்டு விழுது,மிளகாய் தூள், உப்பு போட்டு கலக்கிக் கொள்ளவும்.

2. பின் சிக்கனை நன்கு கழுவி அந்த கலவையில் போட்டு பிரட்டி வைத்து, 3 மணிநேரம் ஃப்ரிட்ஜில் வைத்து ஊற வைக்கவும்.

3. பிறகு ஒரு சிறு பாத்திரத்தில் மைதா, உப்பு மற்றும் பேக்கிங் பௌடரை நீரில் கரைத்து வைத்துக் கொள்ளவும்.

4. பின் ஃப்ரிட்ஜில் இருந்து சிக்கனை எடுத்து, அதில் உள்ள தயிர்  கலவையை முற்றிலும் வடித்து விடவும்.

5. ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடேற்றவும்.

6. பிறகு வடிகட்டிய அந்த சிக்கன் துண்டுகளை மைதா கலவையில் நனைத்து, பிரட் தூளில் பிரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

7. பின் பொரித்த சிக்கனை ஒரு தட்டில் வைத்து அதன் மேல் மிளகுத்தூளைத் தூவி பரிமாறவும். வேண்டுமென்றால் அதன் மேல் எலுமிச்சைபழச்சாற்றை பிளிந்தும் சாப்பிடலாம்.

இப்போது சுவையான  ஃபிங்கர் சிக்கன்  ரெடி!!! இந்த  ஃபிங்கர் சிக்கன் -ஐ சாஸோடு தொட்டு சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும்

Loading...
Categories: Chettinad Recipes Tamil, Non Vegetarian Recipes Tamil, Tamil Cooking Tips, அசைவம்

Leave a Reply


Sponsors