புடலங்காய் கூட்டு கிராமத்து சமையல்,gramathu samayal pudalangai kootu

தேவையானவை:  புடலங்காய் பெரியது – ஒன்று, பெரிய வெங்காயம், தக்காளி – தலா ஒன்று, கடலைப்பருப்பு – கால் கப், துருவிய இஞ்சி, நறுக்கிய பூண்டு, தேங்காய்த்துருவல் – விருப்பத்துக்கேற்ப, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், கடுகு, கறிவேப்பிலை, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, எண்ணெய் – தாளிக்க, உப்பு – தேவைக்கேற்ப.

%e0%ae%aa%e0%af%81%e0%ae%9f%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a4

செய்முறை:  வெங்காயம், தக்காளி, புடலங்காயை நறுக்கவும். கடலைப்பருப்பை அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, ஊறவைத்த கடலைப்பருப்பு சேர்த்து வேகவிடவும். அதில் நறுக்கிய புடலங்காயைச் சேர்த்து, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும். வேகும் நிலையில் இஞ்சித்துருவல், நறுக்கிய பூண்டு, தேங்காய்த்துருவல் சேர்க்கவும். மற்றொரு வாணலியில் எண்ணெய் காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்துத் தாளித்து, புடலங்காய் கூட்டில் சேர்த்து இறக்கவும்.

Categories: Gramathu Samayal Kurippu, Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors