Loading...

தேவையானவை: காராமணி – 50 கிராம் (ஊற விட்டுப் பின் வேகவைத்துக் கொள்ளவும்), கத்திரிக்காய் – 4, பெரிய வெங்காயம் – ஒன்று, தக்காளி – 2, மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், புளி – சின்ன எலுமிச்சை அளவு, இஞ்சி, பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிது, கடுகு, எண்ணெய் – தாளிக்க, உப்பு – தேவைக்கேற்ப.

%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%9a

செய்முறை: பெரிய வெங்காயம், தக்காளியை நறுக்கவும். கத்திரிக்காயை நீளவாக்கில் நறுக்கவும். காராமணியை ஊறவைத்து வேகவைக்கவும். புளியைத் தண்ணீரில் கரைத்து வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் சூடானதும் கடுகு தாளித்து, நறுக்கிய வெங்காயம், தக்காளியை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கவும். கத்திரிக்காய், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கி, வேகவைத்த காராமணி, புளிக்கரைசல் சேர்த்து வேகவிடவும். இஞ்சி, பூண்டு விழுது சேர்த்துக் கிளறவும். நன்கு சுருள வெந்தவுடன் கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.

Loading...
Loading...

Leave a Reply


Recent Recipes

Sponsors