கல்லீரல் பாதிப்பைக் காட்டும் அறிகுறிகள்,kalleeral nooyin mukkiya arikurikal,Liver Disease Symptoms in tamil

ல முக்கிய அறிகுறிகள், கல்லீரல் நோயைக் காட்டும். அவற்றின் மூலம் கல்லீரல் பாதிப்பை அறிந்து உடனடியாக டாக்டரை அணுகி நலம் பெறலாம்.

கல்லீரல் பாதிப்பைக் காட்டும் அறிகுறிகள்
தற்போது மதுபானப் பழக்கம் போன்றவற்றால் கல்லீரல் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

நமது உடல் உள்ளுறுப்புகளில் மிக முக்கியமானது, கல்லீரல். உலகளவில் இன்று பல கோடிப் பேர் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு இறக்கின்றனர்.

நமது கல்லீரல் நன்றாக இருக்கிறதா என்ற அச்சம் தோன்றலாம். சில முக்கிய அறிகுறிகள், கல்லீரல் நோயைக் காட்டும். அவற்றின் மூலம் கல்லீரல் பாதிப்பை அறிந்து உடனடியாக டாக்டரை அணுகி நலம் பெறலாம்.

அந்த அறிகுறிகள் பற்றிய விவரம்…

* கடுமையான மஞ்சள்காமாலை நோய் ஏற்பட்டு அதன் மூலம் கணையம் மற்றும் பித்தப்பை பாதிப் படைந்தால்கூட அது கல்லீரலையும் பாதிக்கும் வாய்ப்பு இருக்கிறது.

* சிறுநீர் தொடர்ந்து மஞ்சள் நிறத்தில் வந்தால் அது கூட கல்லீரல் பிரச்சினைக்கான அறிகுறிதான்.

%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%80%e0%ae%b0%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d

* அதேபோல, மலம் கழிக்கும்போது அதன் நிறம் பழுப்பிலிருந்து நல்ல மஞ்சளாகவோ, சாம்பலாகவே மாறினால் கல்லீரலில் சேதம் இருப்பதாக அர்த்தம்.

* சிறுநீரகச் செயலிழப்பு மற்றும் கல்லீரல் பிரச்சினை என இரண்டுக்கும் முக்கிய அறிகுறியாக இருப்பது, உடல் அரிப்பு. அதாவது, தொடர்ந்து உடல் அரிப்பு அதிகம் இருந்தால் மருத்துவரை ஆலோசிப்பது நல்லது.

* கல்லீரலில் பிரச்சினை இருப்பவர்களுக்கு உடலில் எளிதாக காயம் ஏற்படுவதோடு, ரத்தமும் விரைவாக வெளிவரும். கல்லீரல் பாதிப்பால் ரத்தம் உறையத் தேவையான புரதச் சத்து கிடைக்காது. அதனால் இந்தப் பாதிப்பு ஏற்படும்.

* கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தால் பசியின்மை ஏற்படும். இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவதுடன் உடல் எடையும் குறையும். உடல் எப்போது சோர்வாகவே இருப்பதும், குழப்பமான மனநிலையில் இருப்பதும்கூட கல்லீரல் பாதிப்பின் அறிகுறிதான்.

* கல்லீரல் வேலை செய்வதை நிறுத்தினால் குடிக்கும் தண்ணீர் வயிற்றிலே அதிகம் தங்கும், இதனால் வயிறு வீக்கமாகக் காணப்படும்.

Loading...
Categories: Maruthuva Kurippugal in Tamil

Leave a Reply


Sponsors