பாலுடன் எந்தெந்த உணவுகளை சேர்த்து சாப்பிடக்கூடாது,milk tips in tamil

நம்மில் சிலருக்கு இரவில் ஒரு டம்ளர் பல சாப்பிட்டால் தான் தூக்கமே வரும். அதேபோல் தான் சிலருக்கு இரவில் கட்டாயம் வாழைப்பழம் சாப்பிட வேண்டும். அதோடு நம்மில் பல பேர் பால், பழம் இரண்டையும் சாப்பிட்டே ஒரு நேரத்துக்கு உரிய உணவை முடித்துக் கொள்வார்கள்.

ஆனால் சில உணவுகளை சில குறிப்பிட்ட உணவுகளோடு சேர்த்து சாப்பிடக் கூடாது. இரவில் கீரை, தயிர் போன்றவை சாப்பிடக்கூடாது என்பது நமக்குத் தெரியும். ஆனால் சில உணவுகளோடு சில குறிப்பிட்ட உணவுகளை சேர்த்து சாப்பிட்டால் அதுவே விஷமாக மாறிவிடும்.

 

அப்படி எந்தெந்த உணவுகளோடு எவற்றைச் சேர்த்துச் சாப்பிடக்கூடாது.

இரவில் பால் குடித்தால் சிலருக்கு நிறைவாக இருக்கும் என்பது உண்மைதான். ஆனால் தவறான உணவுகளோடு பாலைச் சேர்த்து அருந்தக்கூடாது.

பாலுடன் எந்தெந்த உணவுகளை சேர்த்து சாப்பிடக்கூடாது?

பால் சாப்பிடும்போது அதனுடன் பழங்கள், இறைச்சி, தேங்காய், வால்நட், தயிர், முட்டை, கொள்ளு, பருப்ப வகைகள் ஆகியவற்றை சேர்த்து உண்ணக்கூடாது. அவ்வாறு சாப்பிடும் போது, ஜீரண செயலில் ஈடுபட்டிருக்கக்கூடிய என்சைம்களின் செயலைத் தடுத்து, உடலில் பல பிரச்சனைகளைத் தோற்றுவிக்கும்.

அதேபோல், பாலுடன் முள்ளங்கி, பூண்டு, கீரைகள், முருங்கைக்காய் ஆகியவற்றால் ஆன உணவுகளுக்குப் பின், பாலை குடிக்கவே கூடாது.

அதேபோல் பால், தயிர் ஆகியவற்றோடு பழங்களைச் சுர்த்து சாப்பிடவே கூடாது. பழங்கள் ஆரோக்கியமானவை தான். ஆனால் அவற்றை பிற எந்த உணவுகளோடும் சேர்த்து சாப்பிடக்கூடாது. அது நம்முடைய ஜீரண மண்டலத்தை பலவீனமாக்கும். உடலில் கபம், பித்தம் பான்றவற்றை உண்டாக்கிவிடும்.

Loading...
Categories: Maruthuva Kurippugal in Tamil

Leave a Reply


Sponsors