ஒரே நாளில் பருக்களைப் போக்கும் பட்டை,mugaparu poga esay tips in tamil,mugaparu poga pattai

கோடைக்காலத்தில் வெளியே ஒருமுறை சென்று வந்தாலே, உடல் சூடு அதிகரித்து, பருக்கள் வந்து முகத்தையே பாழாக்கிவிடும். இப்படி முகத்தைப் பாழாக்கும் பருக்களைப் போக்க எத்தனையோ வழிகளை முயற்சித்திருப்பீர்கள். இருப்பினும் பருக்கள் போகாமல் அப்படியே இருக்கும்.

ஆனால் பருக்களைப் போக்க நம் வீட்டில் உள்ள ஒரே ஒரு பொருள் போதும். அந்த ஒரு பொருளில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் பருக்களைப் போக்கி, சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அது வேறொன்றும் இல்லை, சமையலறையில் உள்ள பட்டை தான். உங்களுக்கு அடிக்கடி பருக்கள் வருமாயின், கீழே கொடுக்கப்பட்டுள்ள சில பட்டை ஃபேஸ் பேக்குகளை முயற்சித்துப் பாருங்கள்.

பட்டை மற்றும் தேன் ஃபேஸ் மாஸ்க் சிறிது பட்டையை எடுத்து பொடி செய்து கொண்டு, தேன் சேர்த்து கலந்து, பருக்களின் மீது தடவி உலர வைத்துக் கழுவுங்கள். இப்படி தினமும் செய்து வந்தால், பருக்கள் வருவது தடுக்கப்படும்.

pimples treatment at home in tamil

பட்டை மற்றும் பூசணி ஃபேஸ் மாஸ்க் 3-4 துண்டுகள் வேக வைத்த பூசணியை நன்கு மசித்து, அத்துடன் 2 ஸ்பூன் பட்டை தூளை சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் மசாஜ் செய்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இது பருக்களைப் போக்குவதோடு, முகப் பொலிவையும் அதிகரிக்கும். பட்டை மற்றும் தயிர் ஃபேஸ் மாஸ்க் வறட்சியான சருமத்துடன், பருக்களாலும் அவஸ்தைப்பட்டால், இந்த ஃபேஸ் மாஸ்க்கைப் போடுங்கள். அதற்கு தயிருடன் சிறிது பட்டைத் தூள் சேர்த்து, அத்துடன் தேன் சிறிது சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தினால், நல்ல மாற்றம் தெரியும்.

%e0%ae%92%e0%ae%b0%e0%af%87-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b
பட்டை மற்றும் காபி ஃபேஸ் மாஸ்க் 1 ஸ்பூன் காபி தூளுடன், 1 ஸ்பூன் பட்டைத் தூள் மற்றும் 1 ஸ்பூன் பாதாம் எண்ணெய் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, பருக்களின் மீது தடவி 20 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இதனால் பருக்கள் நீங்குவதோடு, சருமமும் புத்துணர்ச்சி அடையும்.

பட்டை மற்றும் பப்பாளி மாஸ்க் 2 ஸ்பூன் பட்டை தூளுடன், சிறிது பப்பாளி சாறு சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்தால், பருக்கள் வேகமாக மறைந்துவிடும்.

பட்டை மற்றும் ரோஸ் வாட்டர் மாஸ்க் 2 ஸ்பூன் பட்டை தூளுடன், சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, அத்துடன் 1 ஸ்பூன் கடலை மாவு சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த மாஸ்க் பருக்களைப் போக்குவதுடன், சரும ஆரோக்கியத்தையும் பொலிவையும் மேம்படுத்தும்.

பட்டை மற்றும் சந்தனப் பவுடர் மாஸ்க் 1-2 ஸ்பூன் சந்தன பவுடருடன், சிறிது பட்டை தூள் மற்றும் 2-3 ஸ்பூன் பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின் கழுவ வேண்டும்.

பட்டை மற்றும் ஜாதிக்காய் மாஸ்க் 1 ஸ்பூன் பட்டை தூளுடன், 1 ஸ்பூன் ஜாதிக்காய் பவுடர் மற்றும் சிறிது தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து, முகத்தைக் கழுவ வேண்டும்.

Categories: Azhagu Kurippugal, Beauty Tips Tamil

Leave a Reply


Sponsors