குழந்தைகளுக்கு விருப்பமான மட்டன் 65,mutton 65 in tamil ,kulanthai unavugal list in tamil

Loading...

தேவையான பொருட்கள் :

எலும்பில்லாத மட்டன் – 250 கிராம்
கடலை மாவு – 3 டேபிள்ஸ்பூன்
சோள மாவு – 2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி – பூண்டு விழுது – 3 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 3 டீஸ்பூன்
சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன்
சோம்புத்தூள் – முக்கால் டீஸ்பூன்
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன் (அல்லது) வினிகர் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு

%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae

செய்முறை :

* மட்டன் துண்டுகளை நன்றாகக் கழுவி, குக்கரில் போட்டு உப்பு சேர்த்து 30 நிமிடங்கள் வேகவைத்து இறக்கி, தண்ணீரை வடித்து ஆறவிடவும் (அந்தத் தண்ணீரில் மட்டன் சூப் செய்யலாம் அல்லது குஸ்கா, குழம்பு செய்யும்போது பயன்படுத்திக்கொள்ளலாம்).

* ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, சோள மாவு, இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய்த்தூள், சீரகத்தூள், சோம்புத்தூள், மஞ்சள்தூள், எலுமிச்சைச் சாறு, உப்பு அனைத்தையும் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியான பேஸ்ட் பதத்தில் செய்து கொள்ளவும். (தண்ணீர் குறைவாகவே சேர்க்கவும்).

* ஆறிய மட்டன் துண்டுகளை மசாலா கலவையில் நன்றாக கலந்து 1 மணிநேரம் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்.

* அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்து நன்கு சூடானதும், மட்டன் துண்டுகளை போட்டு பொரித்து எடுக்கவும்.

* மேல் மாவு வெந்து மொறுமொறுப்பாகும் வரை பொரித்தால் போதும்.

* சூப்பரான மட்டன் 65 ரெடி.

குறிப்பு :

நன்கு காய்ந்த எண்ணெயில் பொரித்தால், மட்டன் 65, நீண்ட நேரம் க்ரிஸ்பியாக இருக்கும். காயாத எண்ணெயில் பொரித்தால் மட்டன் அதிக எண்ணெய் குடிக்கும்.

அதிக நேரம் பொரித்தால் மட்டன் ரப்பர் அல்லது கல் போன்றாகிவிடும். மாவு மட்டும்தான் வேக வேண்டும், மட்டன் ஏற்கெனவே வெந்துவிட்டது என்பதை நினைவில் கொள்ளவும்

Loading...
Loading...
Categories: kulanthai unavugal in tamil, Non Vegetarian Recipes Tamil, Tamil Cooking Tips, அசைவம்

Leave a Reply


Recent Recipes

Sponsors